குமரியின் சிவாலய ஓட்டம்

കന്യാകുമാരി ജില്ലയിലെ ശിവാലയ ഓട്ടം Shivalaya Ottam

திருக்கோவில்கள்

Shivalayam ottam

திருச்சிற்றம்பலம் …ஓம் நமச்சிவாயம்…

Kumari Shiva-Layam Ottam Temples

ROUTE MAP

12 SIVA


1000 ஆண்டுக்கும் மேல் பழமையான வரலாற்று சிறப்பு மிகு குமரி சிவாலய ஆண்மீக திருத்தல தரிசன ஓட்டம்.
maxresdefault
Screenshot_20220226-182323_WhatsApp
சிவாலய ஓட்டம் – அது என்ன ?

கன்னியாகுமரி மாவட்ட ஆலய விழாக்களில் எத்தனையோ சிறப்புகள். அவற்றில் குறிப்பிடத்தக்கது, சிவாலய ஓட்டம். மகாசிவ ராத்திரி அன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிப்பதுதான் இந்த வழிபாட்டின் தனிச் சிறப்பு. அதாவது 24 மணி நேரத்தில், சுமார் 90 கி.மீ. தொலைவுக்குட்பட்ட பன்னிரண்டு சிவாலயப் பெருமான்களை தரிசிப்பது. இந்தக் கோயில்கள் அனைத்தையும் உரிய நேரத்தில் தரிசிக்க வேண்டிய காலம் கருதியே ஓட்டம்!

இந்த சிவாலய ஓட்டம் எப்படி ஆரம்பித்தது?   வரலாறானது…

kdb -277.jpgபுருஷாமிருகம் பாதி மனித உருவம், மீதி புலி உருவமாக அமைந்த ஒரு பிறவி. ஆழ்ந்த சிவபக்தர். சிவனைத் தவிர, வேறு இறைவனை ஏற்கமாட்டார். விஷ்ணு நாமம், இவருக்குக் கேட்க சகிக்காது! ஆனால் தானும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை அவருக்கு உணர்த்த விரும்பினார் பகவான் கிருஷ்ணன். அவர் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனை அழைத்தார். நடைபெறவிருக்கும் குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால், அந்த புருஷாமிருகத்தின் உதவியும் தேவைப்படுகிறது. போர் வெற்றிக்காக நடத்த இருக்கும் யாகத்திற்கு அந்த மிருகத்தின் பாலானது தேவைபடுகுறது. ஆகவே, அதனை சந்தித்து அதன் உதவியைக் கோரி வருமாறு அவர் பீமனை அனுப்பி வைத்தார். கூடவே, அவனிடம் 12 ருத்ராட்சங்களைத் தந்து, தன்னுடைய கோவிந்தா, கோபாலா என்ற பெயர்களை உச்சரித்தவாறே புருஷா (புருடா)மிருகத்தை நெருங்குமாறும் சொன்னார். ‘‘என் பெயரைக் கேட்க விரும்பாத புருடா மிருகம், உன் மீது பாயும். நீ உடனே ஒரு ருத்ராட்சத்தை அந்த இடத்தில் போட்டுவிடு.அது ஒரு சிவலிங்கமாக மாறிவிடும். அதனைக் காணும் புருடா மிருகம், அந்த லிங்கத்துக்கு உரிய வழிபாட்டினை செய்த பிறகுதான் மறுவேலை பார்க்கும்.2 வது சிவாலயம் திக்குறிச்சி அங்கிருந்து நீ ஓடிவிடு. பிறகு அது உன்னைத் துரத்தி வரும். அடுத்த இடத்தில் இன்னொரு ருத்திராட்சத்தைப் போடு. இதுவும் லிங்கமாக மாறும். புருடா மிருகமும் பூஜை செய்யத் தொடங்கி விடும். இப்படி பன்னிரண்டு இடங்களுக்கு ஓடி, ஓடி அதனை அலைக்கழித்தால் பன்னிரண்டாவது ருத்திராட்சம் விழும் இடத்தில் நான், பரமேஸ்வரனுடன் உங்கள் இருவருக்கும் காட்சி தருவேன்’’ என்று விளக்கி, பீமன் நடந்துகொள்ள வேண்டிய முறையைச் சொன்னார். பீமனும் அவ்வாறே செய்தான். அப்படி முதல் ருத்திராட்சம் விழுந்த இடம்தான் திருமலை. பன்னிரண்டாவது விழுந்த இடம் நட்டாலம். நட்டாலத்தில் ஹரியும் ஹரனும் இணைந்த சங்கரநாராயணராக மகாவிஷ்ணு காட்சி தந்து, சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்று புருடா மிருகத்துக்கு மட்டுமல்ல, உலகுக்கே உணர்த்தினார். நடக்கயிருக்கும் யாகத்திற்கு தேவையான பால் தனது மடியில் இருந்து எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தது. புருஷா மிருகத்தின் உதவியும் குருக்ஷேத்திர யுத்தத்திற்குக் கிடைத்தது.

1.திருமலை சூலப்பாணிதேவர்
2.திக்குறிச்சி மஹாதேவர்
3.திற்பரப்பு வீரபத்திரேஷ்வரர்
4.திருநந்திக்கரை நந்தீஷ்வரர்
5.பொன்மனை தீம்பிலான்குடிஷ்வரர்
6.பந்நிப்பாகம் கிராதமூர்த்திஷ்வரர்
7. கல்குளம் நீலகண்டர்
8. மேலாங்கோடு காலகாலர்
9. திருவிடைக்கோடு சடையப்பர்
10.திருவிதாங்கோடு பரசுபாணிஷ்வரர்
11.திற்பன்றிகோடு பக்தவசலேஷ்வரர்
12.திருநட்டாலம் சங்கரநாராயணர்

பண்ணீரு சிவாலய தரிசனத்தின் பின்னர் திருவாட்டர் தேவசத்திற்கு சென்று மூலவர் ஆதிகேசவ பெருமாளையும் தங்கத்திலான சிவலிங்கப் பெருமானையும் தரிசித்து அல்லது சுசீந்திரம் தேவசம் சென்று மூலவர்கள் ஸ்தாணு-மாலையரையம் தரிசித்து ஈசனும் பெருமாளும் லயம் கொண்டிருக்கும் தரிசன அருள் பெற்று தங்களது ஆன்மீக தரிசன பயணத்தை முடித்து கொள்வார்கள்.


‘‘கோவிந்தா, கோபாலா…..சிவனே….வல்லபா…!!!”

kdb-2753இப்படி கர்ண பரம்பரையாகச் சொல்லப்படும் கதையை ஒவ்வொரு மகாசிவராத்திரி அன்றும் ஒரு குழுவினர் பீமனுடைய பிரதிநிதியாக ஓடி, ஓடிச் சென்று அந்த சிவாலயங்களைத் தொழுகிறார்கள். இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கு பெறுபவர்கள் மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர். சிவராத்திரிக்கு முதல் நாள் மாலை 4 மணி அளவில் காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு வழியில் ஏற்படக்கூடிய செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் எடுத்துக்கொள்வர். முதற்கோயிலான முஞ்சிறை என்ற திருமலையில், ஆற்றில் நீராடி, ஈசனை வணங்கிவிட்டு ஓட ஆரம்பிப்பர். இப்போதிலிருந்து பன்னிரண்டாவது கோயிலில் தரிசனம் முடிக்கும்வரை ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்ற கோஷத்தை ஒலித்தபடியே இருப்பார்கள். நிறைவாக மும்மூர்த்திகளும் அருளும் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டு ஓட்டத்தை முடிக்கிறார்கள். இது ஒரு பக்தி செலுத்தும் முறை. இதனால் என்ன பயன் கிட்டுகிறது என்ற எதிர்பார்ப்பைவிட வித்தியாசமாக ஏதாவது ஒரு முறையில் இறைவழி பாட்டை மேற்கொள்ளும் பக்தி உணர்வுதான் அவர்களிடம் நிறைந்திருக்கிறது.

*சிவலயம்*Screenshot_20210131-054634_Photos
*சிவாலயம்*
பொருள் ஆச்சரியம்..!!!

சிவனில் லயிப்பது சிவ லயம் தரிசனம் அதுவே பிற்காலத்தில் சிவாலய தரிசனம் ஆயிற்று…!!!

________________________

T_500_976கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று ஓடிச் சென்றே வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ ஞ பெற்றது. சுமார் 118 கிலோமீட்டர் தூரம் கொண்டது, சிவாலய ஓட்டம். சிவராத்திரி அன்று அதிகாலை 3 மணி அளவில் காவி வேட்டி, காவித்துண்டு, ருத்ராட்சம் அணிந்து, வெறுங்காலுடன் சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு, பனை ஓலை விசிறியுடன் இந்த ஓட்டத்தை சிவ பக்தர்கள் தொடங்குவார்கள். 12 சிவாலயங்களில் முதல் ஆலயமான முஞ்சிறை என்ற திருமலையில் இருந்து இந்த ஓட்டம் தொடங்கும். 12-வது ஆலயமான திருநட்டாலம் ஆலயத்தை தரிசிக்கும் வரை சிவ நாமத்தை உச்சரித்தபடியே இந்த ஓட்டம் நடைபெறும்.  Captureமுஞ்சிறை திருமலை மகாதேவர் கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில், திருபன்னிபாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு சிவன்கோவில், திருபன்றிகோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில்’ ஆகியவை அந்த 12 ஆலயங்கள் ஆகும்.

kdb - 201.jpgபாண்டவர்களின் மூத்தவரான தருமர், ராஜ குரு யாகம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு, புருஷா மிருகத்தின் (வியாக்ரபாதர்) பால் தேவைப்பட்டது. அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும், விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு. வியாக்ரபாத மகரிஷிக்கு, சிவனும், விஷ்ணுவும் ஒன்று என உணர்த்த நினைத்தார், மகாவிஷ்ணு. அதன்படி பீமனிடம், புருஷா மிருகத்தின் பால் கொண்டுவர கட்டளையிட்டார். கூடவே 12 ருத்ராட்சங்களை பீமனின் கையில் கொடுத்தார். “உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால், இதில் ஒன்றை கீழே போட்டுவிடு” என்று சொல்லியும் அனுப்பினார்.

A temple with a hoary past - The Hinduபீமன் புருஷா மிருகத்தை தேடி கானகம் வந்தான். அன்று மகாசிவராத்திரி நன்னாள். அங்கே புருஷா மிருகம் சிவ தவத்தில் முஞ்சிறை திருமலையில் சிவபூஜை செய்து கொண்டிருந்தது. அங்கு பீமன் சென்று, “கோபாலா.. கோவிந்தா…” என்று கூறி புருஷா மிருகத்தை சுற்றி வந்தான். திருமாலின் திருநாமத்தைக் கேட்டதும், புருஷா மிருகம் மிகவும் கோபம் அடைந்து, பீமனை விரட்ட ஆரம்பித்தது. உடனே பீமன் அந்த இடத்தில் ஒரு ருத்ராட்சத்தைப் போட்டான். கீழே விழுந்த ருத்ராட்சம், ஒரு சிவலிங்கமாக மாறியது. இதைப் பார்த்ததும் புருஷா மிருகம் சிவலிங்க பூஜை செய்யத் தொடங்கி விட்டது. சிறிது நேரம் கழித்து பீமன் மீண்டும், ‘கோவிந்தா, கோபாலா’ என குரல் எழுப்பி, பால் பெற முயன்றான். புருஷா மிருகம் மீண்டும் பீமனைப் பிடிக்க துரத்தியது. சிறிது தூரம் ஓடிய பீமன் மீண்டும் ஒரு ருத்ராட்சத்தை கீழே போட்டான். அதுவும் சிவலிங்கமாக மாறியது. அதைப் பார்த்து மீண்டும் புருஷா மிருகம் சிவ பூஜை செய்யத் தொடங்கியது.

இப்படியே 12 ருத்ராட்சங்களும் 12 சிவ தலங்களாக உருவாகி நின்றன. 12-வது ருத்ராட்சம் விழுந்த இடத்தில் ஈசனுடன் மகாவிஷ்ணு இணைந்து, சங்கர நாராயணனாக காட்சி தந்தனர். அதைக் கண்ட புருஷா மிருகம் அரியும், அரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்ந்து கொண்டது. கடைசி தலமான திருநட்டாலத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோலத்திலும் ஈசன் காட்சி தந்தார். அந்த மகிழ்ச்சியில் தருமரின் யாகத்திற்கு பால் கொடுக்க புருஷா மிருகம் ஒப்புக் கொண்டது. இதை மெய்ப்பிக்கும் வகையில் திருநட்டாலத்தில் இன்னும் இரண்டு ஆலயங்கள் உள்ளன. ஒன்றில் ஈசன், அர்த்தநாரீஸ்வரராகவும், மற்றொரு ஆலயத்தில் சங்கரநாராயணராகவும் அருள்பாலிக்கிறார். சிவாலய ஓட்டம் தொடர்பான திருக்கோவில்களின் தூண்கள், புருஷா மிருகம் மற்றும் பீமனின் சிற்பங்களை நாம் பார்க்க முடியும்.

WEWEமேற்கண்ட புராண நிகழ்வின் அடிப்படையில்தான் ஆண்டுதோறும் சிவராத்திரி நன்னாளில் அடியவர்கள் சிவாலய ஓட்டம் சென்று, வேண்டியதை பெறுகிறார்கள். சிவாலய ஓட்டத்தில் பங்கு கொள்ளும் அடியவர்களுக்கு ஆங்காங்கே மோர், பழரசம், பானகம், கிழங்கு, கஞ்சி போன்றவற்றைக் கொடுத்து பக்தர்கள் பலரும் மகேஸ்வர பூஜை செய்கிறார்கள். பீமன் ஒரே சிவராத்திரி நாளில் 12 சிவாலயங்களுக்கும் ஓடியதால், இந்த ஆலயங்கள் ‘சிவாலய ஓட்டத் தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்களில் மகா சிவராத்திரி மட்டுமின்றி, மாதாந்திர சிவராத்திரி நாட்களிலும் சிவராத்திரி ஓட்டம் நடக்கிறது.


‘‘கோவிந்தா….கோபாலா….சிவனே…. வல்லபா…!!!”Image result for shiva vishnu

Screenshot_20230222-000608_DriveScreenshot_20230222-000620_Drive

Scope:

kdb - 169(2)The south most corner of India is the Kanyakumari district – a very scenic place with fertile lands surrounded by mountains and ocean. This was part of the erstwhile Thiruvithangur state. The capitol of this state was Padmanabhapuram / Kalkulam. Around this town there are twelve nice abodes of lord shiva inviting the devotees to worship the lord who is adorned by the nature – moon, river & snakes, in this inspiring natural surroundings. The devotees take up a run during the Shiva ratri every year. In this they worship in all the twelve temples covering a distance of 50 miles (85.6 Km) in two half Nights and a day (in 24 Hrs.). They complete the run in the everlasting lord at Suchinthiran and Thiruvattaru Devaswoms. They run holding a palm-leaf fan in their hand. They observe fast for a week before the day of the run. During the fasting period they eat tender coconut, tender palmyra (nungu) during the day and tulsi and water in the night. Many of them chant “Govindha Gopala” while running.

vikatan_2020-02_7aeb3ebd-5d41-420b-9fd5-b6e50c1f862d_IMG_20200221_WA0004

History:

There is an interesting story that is being told about this run, which is also called chaliya ottam. According to this story the pandava prince bhima wanted to get the milk of purushamrigam (vyagrapadha maharishi) Who was meditating lord shiva. When bhima approached him for the milk, he got disturbed and tries to catch bhima. The freigtened bhima drops a rudraksha beed on the earth. It becomes a shiva lingam. Vyagrapada maharishi being a devout yogi of lord shiva, looses himself in the worship of the mind-stealing lord, leaving behind bhima. Again bhima tried to approach him for milk singing Gopala Govinda. Disturbed again the sage angrily catches him. The story repeats. This happens for twelve times and in the last time bhima puts his one leg in the place of the sage. His brother yudhishthira was called as the jury. In spite of bhima being his brother, he told the right justice that bhima was at fault. Impressed vyagrapadar gives off the milk bhima wanted. The truth of this story is difficult to be confirmed. It could be more a folklore. But very likely that these temples are worshiped by the great saint vyagrapadha, which is evident from the names of various places over here.

20210202_100534

ശിവാലയ ഓട്ടം – ഐതീഹ്യം

ശിവാലയ ഓട്ടത്തെപ്പറ്റി തിരുവട്ടാർ സ്ഥല പുരാണങ്ങളിൽ രണ്ട് പുരാവൃത്തമുണ്ട്. അതിൽ പ്രധാനപ്പെട്ടതും ആദികേശവ ക്ഷേത്രത്തിലും ശുചീന്ദ്ര സ്ഥാണുമാലയ ക്ഷേത്രത്തിലും കൊത്തിവച്ചിട്ടുള്ള ശില്പങ്ങളിൽ നിന്നും മനസ്സിലാക്കുവാൻ സാധിക്കുന്നതുമായ പുരാവൃത്തമാണ് ആദ്യം പറയുന്നത്. വ്യാഘ്രപാദ മഹർഷിയും ഭീമസേനനും തമ്മിലുള്ള സംഘട്ടനത്തിന്റെ പശ്ചാത്തലമാണ് അത്. തിരുവിതാംകൂറിന്റെ തെക്കുഭാഗത്ത് അതിർത്തി ഗ്രാമമായ മുഞ്ചിറയിൽ മുനിമാർ തോട്ടം എന്നൊരു സ്ഥലമുണ്ട്. ഇവിടെ താമ്രപർണ്ണി നദിക്കരയിൽ മഹാശിവഭക്തനായ വ്യാഘ്രപാദ മഹർഷി തപസ്സനുഷ്ഠിച്ചിരുന്നു. അദേഹത്തിന് വ്യാഘ്രപാദർ എന്ന് പേരുവരാൻ ഒരു കാരണമുണ്ട്. ശിവനെ മാത്രം പ്രഭുവും ആശ്രയസ്ഥാനവുമായി കരുതി തപസ്സും പൂജയുമായി കഴിഞ്ഞിരുന്ന മഹർഷിക്ക് സന്ധ്യാവന്ദനത്തിനുള്ള പൂക്കൾ പറിക്കാൻ നന്നെ ബുദ്ധിമുട്ടേണ്ടി വന്നു. പൂമരം പിടിച്ചുലച്ചാൽ നിലത്തു വീഴുന്ന പൂക്കളാണ് പലപ്പോഴും അർച്ചനക്ക് ലഭിക്കുന്നത്. ഇതിൽ മനംനൊന്ത മഹർഷി മരത്തിൽ പിടിച്ചു കയറി പൂക്കളിറുക്കാനായി തന്റെ പാദങ്ങൾ വ്യാഘത്തിന്റെതു പോലെയാകണമെന്ന് ശിവഭഗവാനോട് പ്രാർത്ഥിച്ചു. ഭഗവാൻ തന്റെ പ്രിയ ഭക്തന് അതനുഗ്രഹിച്ചു നൽകി. അങ്ങനെ അദ്ദേഹം വ്യാഘ്രപാദ മഹർഷി എന്ന് അറിയപ്പെട്ടു.

Tamilnadu Tourism: Shivalaya Ottam Temples in Kanyakumari Districtകുരുക്ഷേത്ര യുദ്ധാനന്തരം പാണ്ഡവന്മാർ അശ്വമേധയാഗം നടത്താൻ നിശ്ചയിച്ചു. ശിവമാഹാത്മ്യം ശ്രീകൃഷ്ണന് പറഞ്ഞു കൊടുത്ത ഉപമന്യുവിന്റെയും അനുജൻ ധൗമ്യന്റെയും പിതാവാണ് വ്യാഘ്രപാദൻ. ശിവനിൽ മാത്രം മനസ്സുറച്ച വ്യാഘ്രപാദൻ വിഷ്ണു നാമം സ്വപ്നത്തിൽ പോലും ഉച്ചരിക്കാറില്ല. അശ്വമേധത്തിന് മുഖ്യയജ്ഞാചാര്യനാക്കാൻ വ്യാഘ്രപാദ മഹർഷിയെ തന്നെ ക്ഷണിക്കാൻ ശ്രീകൃഷ്ണൻ പാണ്ഡവരെ ഉപദേശിച്ചു. അദ്ദേഹം ഉത്തമനായ ഋഷീശ്വരനാണെന്നതും അദ്ദേഹത്തിന്റെ വിഷ്ണു വിദ്വേഷം കുറയ്ക്കാൻ ഈ അവസരം ഗുണം ചെയ്യുമെന്നും ശ്രീകൃഷ്ണൻ പറഞ്ഞു. മഹർഷിയെ ക്ഷണിക്കാൻ ഭീമസേനനെ ചുമതലപ്പെടുത്തിയ ശ്രീ കൃഷ്ണൻ പന്ത്രണ്ട് രുദ്രാക്ഷങ്ങൾ സമ്മാനിച്ച് ചില ഉപദേശങ്ങൾ കൂടെ ഭീമന് നൽകി. അങ്ങനെ ഗോവിന്ദ…. ഗോപാലാ…. എന്ന നാമോച്ചാരണവുമായി ഭീമൻ മുനിമാർ തോട്ടത്തിലെത്തി. ശൈവഭക്തോത്തമനായ വ്യാഘ്രപാദ മഹർഷി വിഷ്ണുനാമം ചൊല്ലിയ ഭീമനെ ഓട്ടിക്കാൻ തുടങ്ങി. കോപിച്ചു വരുന്ന മഹർഷിയെ കണ്ട ഭീമൻ ഗോവിന്ദ…. ഗോപാലാ…. എന്നു വിളിച്ചുകൊണ്ട് ഓടി രക്ഷപ്പെടുന്നു, തൊട്ടു പിന്നിൽ തന്നെ മഹർഷിയും പായുന്നു. കുറെ ദൂരം ചെന്നപ്പോൾ ഭീമൻ കൈയിലിരുന്ന ഒരു രുദ്രാക്ഷം നിലത്തുവച്ചു. ഉടൻ അതൊരു ശിവലിംഗമായി മാറി. അങ്ങനെ മുനിയുടെ ക്രോധം ശമിച്ച് അവിടെ ശിവപൂജ ചെയ്യാൻ തുടങ്ങി. മുനി അവിടെ പൂജ നടത്തുമ്പോൾ ഭീമൻ മുനിയെ വീണ്ടും യാഗത്തിനു പോകാൻ പ്രേരിപ്പിക്കാൻ ശ്രമിക്കും. മുനി വീണ്ടും ഭീമന്റെ പുറകേ പോകുമ്പോൾ ഭീമൻ വീണ്ടും വീണ്ടും ഇതുപോലെ രുദ്രാക്ഷങ്ങൾ നിക്ഷേപിക്കുകയും ചെയ്യും. അങ്ങനെ 12 രുദ്രാക്ഷങ്ങളും നിക്ഷേപിക്കുകയും അതെല്ലാം ശിവലിംഗങ്ങളായി ഉയർന്നു വരികയും ചെയ്തു. എന്നിട്ടും മുനിയുടെ കോപം തീരാത്തതിനാൽ ഭീമൻ ശ്രീകൃഷ്ണ ഭഗവാനെ ധ്യാനിച്ചു. അങ്ങനെ ഭഗവാൻ പ്രത്യക്ഷനായി ഭീമന് വിഷ്ണുരൂപത്തിലും മഹർഷിക്ക് ശിവരൂപത്തിലും ദർശനം നൽകി. അങ്ങനെ പത്രണ്ടാമത്തെ ശിവലിംഗ പ്രതിഷ്ഠ നടന്ന സ്ഥലത്ത് (തിരുനട്ടാലം) ശങ്കരനാരായണ പ്രതിഷ്ഠയും ഉണ്ടായി. അങ്ങനെ ശിവനും വിഷ്ണുവും ഒന്നാണ് എന്ന് മനസ്സിലാക്കിയ മഹർഷി സന്തുഷ്ടനാകുകയും അശ്വമേധയാഗത്തിന്റെ ആചാര്യനാകാൻ സമ്മതം മൂളുകയും ചെയ്തു. ഇങ്ങനെരൂപപ്പെട്ട പന്ത്രണ്ട് ശിവലിംഗങ്ങളാണ്, പിൽക്കാലത്ത് പന്ത്രണ്ട് ശിവക്ഷേത്രങ്ങളായി അറിയപ്പെട്ടു എന്നതാണ് ഒരു ഐതിഹ്യം. ഭീമൻ ഓടുന്ന വേളയിൽ ഗോവിന്ദാ…. ഗോപാലാ…. എന്ന നാമം ഉച്ചത്തിൽ ഉരുവിട്ടു എന്ന് ഐതീഹ്യത്തിൽ പറഞ്ഞുവല്ലോ, അതിന്റെ പ്രതീകമായാണ് ശിവാലയ ഓട്ടം നടത്തുന്ന ഭക്തന്മാർ ഗോവിന്ദ…. ഗോപാലാ…. എന്ന വൈഷ്ണവ മന്ത്രം ഉരുവിട്ട് ഓടുന്നത്.

തയ്യാറാക്കിയത്‌ : കന്യാകുമാരി മലയാളീസ്  ടീം


#சிவாலய_ஓட்டம் #என்றால்_என்ன? 

#சிவாலய_ஓட்டத்தில் #கோவிந்தா_கோபாலா #என்று_சொல்வதன் #காரணம்_என்ன?

#சிவனுக்கு_விசிறி #விடுவது_எதற்கு?

சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் நடைபெறும். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளில் குமரியில் பக்தர்கள் பன்னிரண்டு சிவ ஆலயங்களுக்கு நடந்து சென்று வருவார்கள். NANJILகன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளா பகுதியை ஒட்டியிருக்கும் மார்த்தாண்டம் பகுதியில் அமைந்துள்ளது #திருமலை அருள்மிகு #மகாதேவர் கோவில். சிவராத்திரி நாளில் பக்தர்கள் தங்கள் ஓட்டத்தை இந்த ஆலயத்தில் இருந்துதான் தொடங்குவார்கள். #திருமலையில் ஆரம்பித்து #திக்குறிச்சி, #திற்பரப்பு, #திருநந்திக்கரை, #பொன்மனை, #பன்னிபாகம், #கல்குளம், #மேலான்கோடு, #திருவிடைகோடு, #திருவிதாங்கோடு, #திருபன்னிகோடு, #திருநட்டாலம் என பன்னிரண்டு ஆலயங்களிக்கு பக்தர்கள் நடந்து செல்வார்கள். இது சுமார் 90 கிலோமீட்டர் தூரம் கொண்ட பக்தி பயணம் ஆகும். இதில் பங்குகொள்ளும் பக்தர்கள் மூன்று நாள் கடுமையான விரதங்கள் மேற்கொண்டு சிவராத்திரி அன்று ஓட்டத்தை ஆரம்பிப்பார்கள். காலில் செருப்பு அணிய மாட்டார்கள். ஒவ்வொரு கோவில் குளத்திலும் குளித்து ஈர துணியுடன் ஆலயம் சென்று தரிசனம் செய்து பின் அடுத்த ஆலயம் நோக்கி பயணம் செய்வார்கள்.

#சிவாலய_ஓட்டத்தின் #வரலாறு  –  இது பொதுவானமற்றும்  ஒரு நாள்வழி கதை…

இந்த சிவாலய ஓட்டத்திற்கு பல கதைகள் சொல்லப்பட்டாலும் அதிகமாக நம்பப்படுவது #சுண்டோதரன் எனும் அரக்கனின் கதை தான். முன்பு ஒரு காலத்தில் சுண்டோதரன் என்னும் அரக்கன் ஒருவன் இருந்தான். அவன் மிக சிறந்த சிவ பக்தன். சிவலிங்கத்தை எங்கு பார்த்தாலும் குளித்து அந்த லிங்கத்தை மூன்று முறை சுற்றி விட்டுதான் மறுவேலை பார்ப்பான். அவன் ஒரு முறை சிவ பெருமானை நினைத்து கடுமையாக தவம் புரிந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவ பெருமான் அவன் முன் தோன்றி, “என்ன வரம் வேண்டும்” என்று கேட்க, அரக்கன் “தான் யாரை நோக்கி தனது சுண்டு விரலை காட்டுகிறேனோ அவன் சாம்பல் ஆகிட வேண்டும் ” என்று வரம் கேட்க, சிவபெருமானும் கொடுத்து விட்டார். வரத்தை பெற்றதும் அரக்கனுக்கு தனக்கு உண்மையிலே வரம் கிடைத்து விட்டதா என்று சந்தேகம் எழுந்தது. உடனே சிவபெருமானிடம், “நான் இதனை சோத்தித்து பார்க்க தேவலோகம் வரை போகவேண்டும். இப்போது அதற்கு நேரமில்லை. அதனால் தங்களிடமே இதனை சோதித்து பார்க்க போகிறேன்” என அரக்கன் சொல்ல சிவபெருமான் அதிர்ந்து அங்கிருந்து தப்பித்து ஓடுகிறார். ஓடும்போதுதான் சிவபெருமானுக்கு அரக்கனின் சிவபக்தி குறித்து நினைவு வர தன் கழுத்தில் இருந்து ஒரு ருத்ராட்சையை எடுத்து கீழே போட்டார். அதில் ஒரு லிங்கம் உருவானது. லிங்கத்தை கண்டதும் மூடனான அரக்கன் அருகில் உள்ள குளத்தில் குளித்து லிங்கத்தை வழிபாடு செய்து பின் துரத்தினான். சிவபெருமானும் அரக்கன் தன்னை நெருங்கும் போதெல்லாம் ஒரு ருத்திராட்சையை போட்டு வந்தார். 

ஓடும் போது சிவபெருமான் காக்கும் கடவுளான விஷ்ணுவை உதவிக்கு கோவிந்தா…. கோபாலா…. என அழைத்தபடி ஓடினாராம். அதன் அடையாளமாகாத்தான் தற்போதும் பக்தர்கள் ஓடும் பொது #கோவிந்தா… #கோபாலா என்று கூவிய படி செல்வார்கள். சிவராத்திரி அன்று சிவ ஆலயத்தில் நட்டகும் விசேஷத்தில் கோவிந்த கோபாலா என பக்தர்கள் முழங்குவது வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருக்கும். பன்னிரெண்டாவது ஆலயமான நாட்டலாம் வரும்போது விஷ்ணு பெண் அவதாரமான மோகினியாக தோன்றி அரக்கனை மயக்கி அவனுடன் ஆடுகிறார். விஷ்ணு ஆடுவதை போன்றே அரக்கனும் ஆட, விஷ்ணு தனது சுண்டு விரலை தன்னை நோக்கி காட்ட, அரக்கனும் அவ்வாறே செய்ய அரக்கன் சாம்பல் ஆகி விடுகிறான். 

சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் தங்கள் கையில் விசிறி வைத்திருப்பார்கள். எல்லா ஆலயம் செல்லும்போது லிங்கத்திற்கும் விசிறி விடுவார்கள். அதாவது தங்களுடன் சிவபெருமானும் ஓடுவதாக ஐதீகம். அவ்வாறு ஓடும் சிவபெருமானுக்கு இளைப்பாற விசிறி விடுவது வழக்கம்.

பக்தர்கள், நடையாக நடப்பது மட்டுமல்லாது வாகனங்களிலும் இந்த பன்னிரண்டு கோவில்களுக்கு இந்த சிவராத்திரி நாளில் சென்று வருவார்கள். குமரி மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத்திற்காக சிவராத்திரி நாளில் குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. #ஓம்_சிவாய #நமஹ! !! –

கட்டுரை பகிர்ந்தது –  நாஞ்சில்சொந்தங்கள்  குழுவினர்.

—————————————————————————————-

— Maha Shivaraathri —


The 12 Shivalayams :

  1. 278th KDB – MUNCHIRAI Sri Mahadevar – THIRUMALAI Sri Thevar Thirukkovil- (Click
    (Munchirai –Kunnathoor -Kappucaud -Vettunni -Marthandam theater Jn, -Unnamalaikadai -Payanam – Thikkurichi -12.8 Km.)
  2. 5th KDG – THICKURICHCHI Sri Mahadevar Thirukkovil- (Click)
    (Thikkurichi –Chitharal -Ambalakkadai -Arumanai -Kaliyal –Thirpparappu -12.4 Km.)
  3. 276th KDB – THIRPPARAPPU Sri Veerabadhreswarar Mahadevar Thirukkovil- (Click)
    (Thirpparappu –Kulasekaram –Thirunandhikkarai -7.7 Km.)
  4. 160th KDB – THIRUNANDHIKKARAI Sri Nandikeshwarar Mahadevar Thirukkovil- (Click)
     (Thirunandhikkarai –Kulasekaram –Ponmanai –7.2 Km.)
  5. 161st KDB – PONMANAI Sri Theembileshwarar Mahadevar Thirukkovil- (Click)
    (Ponmanai –Chithirancode -Kumarapuram, -Muttacaud –Pannippagam -11.7 Km.)
  6. 202nd KDB – PANNIPPAAGAM Sri Kiraathamoorthi Mahadevar Thirukkovil- (Click)
    (Pannippagam –Saral vilai -Marunthukkottai -Padmanabhapuram –Kalkulam – 5.3 Km.)
  7. 164th KDB – KALKULAM Sri Nainar Neelakandaswamy Mahadevar Thirukkovil- (Click)
    (Kalkulam –Padmanabhapuram –Melancode -2.9 Km.)
  8. 167th KDB – MELAANKODU Sri Kaalakaalar Mahadevar Thirukkovil- (Click )
    (Melancode –Kumaracoil Bus stop -Villukuri –Thiruvidaicode –4.6 Km.)
  9. 482nd KDB – THIRUVIDAIKKODU Sri Sadaiyappar Mahadevar Thirukkovil- (Click)
    (Thiruvidaicode –Villukuri -Thuckalay -Keralapuram –Thiruvithancode –8.7 Km.)
  10. 170th KDB – THIRUVITHAAMKODU Sri Parithipaani Mahadevar Thirukkovil- (Click)
    (Thiruvithancode –Nadukkadai -Kodiyoor -Perambi -Palliyadi –Thirupanthicode -8.6 Km.)
  11. 199th KDB – THIRUPPANRIKKODU Sri Bhaktavachaleshwarar Mahadevar Thirukkovil, Palliyadi- (Click)
    (Thirupanthicode Thirunattalam -3.2 Km.)
  12. 281st KDB – THIRUNATTALAM Sri Ardhanaareeshwarar Mahadevar Thirukkovil- (Click
    & 280th KDB – THIRU NATTALAM Sri Sankaranaaraayanar Thirukkovil- (Click)

Screenshot_20210131-053140_Drive

பகிர்ந்தது –  Sri. Er. Arunachalam

—————————————————————–

Different possible route maps from one devaswom to another devaswom 

(Extracted from Google & wiki Map)

FB_IMG_1615303459521

sivalayam 1-2sivalayam 2-3sivalayam 3-4sivalayam 4-5sivalayam 5-6sivalayam 6-7sivalayam 7-8sivalayam 8-9sivalayam 9-10sivalayam 10-11sivalayam 11-12

All these Temples are in and around Kalkulam and Vilavankodu Taluks of KK Dist.

————————————————————

THE TRAVANCORE GOVERNMENT GAZETTE 14.02.1939

Screenshot_20210128-080342_Drive

 

sivsratri5

 

#ശിവാലയ_ഓട്ടം_കൂപ്പൺ_സമ്പ്രദായം
—————————————————————
കന്യാകുമാരി ജില്ലയിലെ 12 ശിവക്ഷേത്രങ്ങളിൽ ആണ്ടുതോറും ശിവരാത്രിയോടനുബന്ധിച്ചു ഭക്തർ നടത്തുന്ന പ്രസിദ്ധമായ തീർത്ഥാടനമാണ് ശിവാലയ ഓട്ടം അഥവാ ചാലയ ഓട്ടം. തിരുമല കോവിലിൽ നിന്നും ആരംഭിച്ച് തിരുനട്ടാലം വരെ, 24 മണിക്കൂറിനുള്ളിൽ ഏകദേശം 85 ഓളം കിലോമീറ്റർ ദൂരമാണ് ഭക്‌തർ (“ഗോവിന്ദൻമാർ”) കാൽനടയായി യാത്ര ചെയ്യുന്നത്.
ലേഖനം തയ്യാറാക്കിയത് : ചരിത്രപ്പെരുമ

#ഗസറ്റിൽ_വന്ന_പരസ്യം
ശിവാലയ ഓട്ടത്തിൽ പങ്കെടുക്കുന്ന ഗോവിന്ദൻമാർ പൊൻമന, നട്ടാലം എന്നീ ക്ഷേത്രങ്ങളിൽ എത്തുമ്പോൾ, ക്ഷേത്രഭരണ സമിതി / ദേവസ്വം വകയായി സൗജന്യമായി ഇളനീരും (കരിക്കിൻവെള്ളം) പഴവും വിതരണം ചെയ്യുന്നത് പണ്ടുമുതലേ നടന്നു വരുന്ന സമ്പ്രദായമാണ്. കരിക്കും പഴവും കൈപ്പറ്റാനുള്ള ചീട്ടുകൾ / ടിക്കറ്റുകൾ (#കൂപ്പൺ) തിരുമല ദേവസ്വത്തിൽ വിതരണം ചെയ്യപ്പെടും എന്നും, മേൽപ്പറഞ്ഞ കൂപ്പൺ ഉപയോഗപ്പെടുത്തി ഗോവിന്ദൻമാർ പൊൻമന, നട്ടാലം എന്നീ ദേവസ്വങ്ങളിൽ നിന്നും കരിക്കും പഴവും സ്വീകരിക്കാം എന്നുമുള്ള വിവരം അറിയിച്ചുകൊണ്ട്, 12 ഫെബ്രുവരി 1939 നാളിൽ പുറത്തിറങ്ങിയ തിരുവിതാംകൂർ സർക്കാർ ഗസറ്റിൽ പാറശാല ദേവസ്വം സൂപ്രണ്ട് പ്രസ്‌താവിച്ചു. പരാതി പരിഹാരത്തിനും നേർച്ചക്കുമായി താഴെ കാണിച്ചിട്ടുള്ള മാതിരി ടിക്കറ്റുകൾ കൊടുക്കാൻ നിശ്ചയിച്ചിരിക്കുന്നു എന്നും, അതിൻപടി ഓരോ ഗോവിന്ദനും (ഓട്ടത്തിൽ പങ്കെടുക്കുന്ന ഭക്തൻ) തിരുമല ദേവസ്വത്തിൽ നിന്നും ലഭിക്കുന്നതുമാണ് എന്ന് പ്രസ്‌താവനയിൽ ചൂണ്ടിക്കാട്ടുന്നു. “പൊൻമനയിൽ എത്തിയ ഉടനെ ടിക്കറ്റിൽ പൊൻമന എന്ന് അച്ചടിച്ചിരിക്കുന്ന ഭാഗം ദേവസ്വം ശ്രീകാര്യക്കാരനെ ഏൽപ്പിച്ച് കരിക്കും പഴവും വാങ്ങിക്കേണ്ടതാകുന്നു. ബാക്കിയുള്ള ഭാഗം നട്ടാലം ദേവസ്വത്തിൽ ഹാജരാകുമ്പോൾ അവിടത്തെ ശ്രീകാര്യക്കാരനെ ഏൽപ്പിച്ച് കരിക്കും പഴവും സ്വീകരിക്കേണ്ടതാകുന്നു. പതിവിനു തക്കവണ്ണം കരിക്കും പഴവും വിതരണം ചെയ്യുന്നതും, ടിക്കറ്റ് വാങ്ങാത്തവർക്ക് കരിക്കും പഴവും വിതരണം ചെയ്യുന്നത് അല്ലാത്തതും ആകുന്നു” എന്ന് പ്രസ്‌താവനയിൽ പറയുന്നു.

തിരുവിതാംകൂർ ഗവണ്മെന്റ് ഗസറ്റ് (14 ഫെബ്രുവരി 1939 പേജ് 364) ഈ വാർത്തയും, അതിന്റെ കൂടെ കരിക്കും പഴവും കൈപ്പറ്റാനുള്ള കൂപ്പൺ മാതൃകയുമാണ് ചിത്രത്തിൽ കാണിച്ചിരിക്കുന്നത്.

#കൂപ്പൺ_ഉപയോഗരീതിയും_ഗുണങ്ങളും
പൊൻമന ദേവസ്വം, തിരുനട്ടാലം ദേവസ്വം എന്നിവിടങ്ങളിലാണ് കരിക്കും ഏത്തപ്പഴവും ലഭ്യമാക്കുന്നത്. വ്രതമിരുന്ന് വരുന്ന ഭക്തർക്ക് അന്നദാനം ചെയ്യാൻ ആഗ്രഹം ഉള്ളവർക്ക് (Sponsoring) ഇതിലേക്ക് സംഭാവന ചെയ്യാൻ ദേവസ്വത്തിന് പണം നൽകാനുള്ള സൗകര്യവും ഉണ്ടായിരുന്നു എന്ന് അനുമാനിക്കാം.

ഓട്ടം തുടങ്ങുന്ന തിരുമല ദേവസ്വത്തിലാണ് കൂപ്പൺ നൽകിയിരുന്നത്. ഇടതുവശത്ത് പൊൻമന എന്നും വലതുവശത്ത് നട്ടാലം എന്നും അച്ചടിച്ചിരുന്നു. നടുവിലെ വൃത്തത്തിൽ ഭക്തന്റെ നമ്പർ എഴുതിയാണ് നൽകപ്പെട്ടിരുന്നത്. അതിനാൽ ആ വർഷത്തിൽ ശിവാലയ ഓട്ടത്തിന് എത്ര പേർ പങ്കെടുത്തു എന്നതിന്റെ കണക്കുകൾ അറിയാൻ ഈ സമ്പ്രദായം ഉപയോഗപ്രദമായിരുന്നു (Accountability). എത്ര പേർ പൊൻമന വരെയെത്തി, എത്ര പേർ നട്ടാലം വരെയെത്തി എന്നതിന്റെയും കൃത്യമായ കണക്കുകൾ രേഖപ്പെടുത്താൻ ഈ സമ്പ്രദായത്താൽ സാധിക്കുമായിരുന്നു.

ശിവാലയ ഓട്ടത്തിൽ യാത്ര ചെയ്യേണ്ട മൊത്തം ദൂരത്തിൽ ഏതാണ്ട് മധ്യത്തിലാണ് പൊൻമന എന്നതിനാലാവാം ഇവിടം തിരഞ്ഞെടുത്തത്. നട്ടാലം ആവട്ടെ, ഓട്ടം തീരുന്ന ദേവസ്വമാണ്. അതാത് ദേവസ്വത്തിലെ ശ്രീകാര്യക്കാരൻ കൂപ്പൺ വാങ്ങി പാതി കീറിയെടുക്കുകയും കരിക്കും പഴവും ബാക്കിയുള്ള കൂപ്പണും നൽകുകയും ചെയ്യും എന്നതാണ് രീതി. 

തയ്യാറാക്കിയത്‌ : ചരിത്രപ്പെരുമ ടീം | 3 ഫെബ്രുവരി 2021

—————————————————————————————————————————

அடியார் பெருமக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க மகா சிவராத்திரி சிவாலய ஓட்டத்தினை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்கள் அவர்களுக்கு ஒத்துழைக்கும் முகமாக மகா சிவராத்திரி சிவாலய ஓட்டத்தினை நமது மாவட்டம் மற்றும் தமிழகம் கேரளாவில் இருந்து சிவாலய ஓட்டத்தில் அதிக பக்தர்கள் பங்குகொள்ள செய்து நமது வரலாற்றுப் பெருமையை உலகம் அறியச் செய்வோம்….

NEWS PAPER .

_____________________

அகத்தியமகரிஷி அருளிய சிவராத்திரி விரதம் இருக்கும் முறை!!!

(காலத்தால் மறைக்கப்பட்ட அபூர்வ சிவராத்திரி ரகசியங்கள்.)

(இந்த பதிவை முழுமையாக படியுங்கள். அடுத்த மாதம் 11ம் திகதி வியாழக்கிழமை வர இருக்கின்ற #மஹா #சிவராத்திரியானது அகத்தியர் பெருமான் அருளால் உங்கள் தலையெழுத்தயே மாற்ற கூடிய அபூர்வ சிவராத்திரி. கடந்த சில வருடங்களுக்கு முன் ஸ்ரீ அகத்தியர் விஜயம் என்ற அபூர்வ நூலில் தொடராக வெளிவந்த சிவராத்திரி ரகசியங்கள் பற்றிய அபூர்வ சித்த குறிப்புகளை தொகுத்து பகிர்கிறேன். அன்று முழுமையான சிவனருளை பெற சித்தர்களின் குரலோடு இணைத்து இருங்கள்…. அனைவருக்கும் பகிருங்கள் நன்மைகள் கோடி பெற) சித்தர்களின் தலைவராக இருப்பவரும், தமிழ் மொழியை ஈசனிடம் இருந்து பெற்று பூமிக்குக் கொண்டு வந்தவரும், ஜோதிடத்தின் தந்தையும், சித்த மருத்துவத்தின் தந்தையும், மந்திரங்களின் தந்தையுமாகிய அகத்திய மகரிஷியின் அருளால் இந்த பதிவினை சித்தர்களின் குரலில் இன்று உங்களுக்கு வழங்குகிறோம்; தொடர்ந்து 12 தேய்பிறை சிவராத்திரி இரவுகளில் அண்ணாமலை கிரிவலம் சென்றால், நமது கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும்; அதுவும் எப்படி? இதுவரையிலும் நாம் எத்தனை ஆயிரம் முறை அல்லது எத்தனை லட்சம் முறை மனிதப் பிறவி எடுத்திருப்போம் என்று நமக்குத் தெரியாது; அத்தனை மனிதப் பிறவியிலும் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும்; அப்படி கரைந்து காணாமல் போவதால், அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்தரகசியம் ஆகும்;

பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும்; ஏனென்றால், பல சதுர்யுகங்கள் முடிந்து, பல கல்பங்கள் முடிந்து, இதில் வரும் இரவுகள் அனைத்திலும் அன்னை பராசக்தி ஈசனை பூஜை செய்திருக்கிறாள்; ஆகவே,சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி; ஆலமரத்தடியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி யோகத்தில் அமர்ந்திருப்பதற்குக் காரணமே சிவராத்திரி மகிமையை எடுத்துச் சொல்வதற்காகத்தான்; வியாழக்கிழமையன்று திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேர்த்து வந்தால், அதாவது ஒரே நாளில் பிரதோஷமும் மஹா சிவரத்திரியும் சேர்ந்து வந்தால் அது யோக சிவராத்திரி ஆகும்; அதாவது,யோகியர் மறந்திடாத அபூர்வ சிவராத்திரி ஆகும்; தை மாதத்தில் வரும் தேய்பிறை சிவராத்திரியே பட்ச சிவராத்திரி ஆகும்; ஒரு (தமிழ்)வருடத்திற்கு 12 மாதங்கள்! ஒரு மாதத்திற்கு இரண்டு சிவராத்திரிகள்! ஆக ஆண்டிற்கு 24 சிவராத்திரிகள்! அவை வளர்பிறை சதுர்த்தசி,தேய்பிறை சதுர்த்தசி ஆகும்; இது நித்திய சிவராத்திரி ஆகும்; மாசிமாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவுதான் மகாசிவராத்திரி ஆகும். மாதம் தோறும் வரும் சிவராத்திரியை மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது; சிவராத்திரிகள் இப்படி ஐந்து விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன; ஈசனின் ஐந்து முகத்தை நினைவூட்டும் விதமாகவும், பஞ்ச பூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் ஐந்துவித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன; இவைகளில் ஏதாவது ஒரே ஒரு சிவராத்திரி விரதம் இருந்தாலே போதும்; மனிதப் பிறவி எடுத்தமைக்கான பலனை அடைந்துவிடமுடியும் என விளக்குகிறார் சித்தர்களின் தலைவரும், தமிழ் மொழியை பூமிக்குக் கொண்டு வந்தருமான அகத்தியர்!!!

ஒரு மனிதன் சதுர்த்தசி திதியில் இயற்கையான முறையில் இறந்து, அமாவாசையன்று தகனம் செய்தால், அந்த ஆன்மா சிவலோகத்தில் சிவகணமாக உயர்ந்த நிலையை அடைவார்; ஈசனை முழு முதற்கடவுளாக பின்பற்றும் ஒவ்வொருவருக்கும் இதைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை!

சில நேரங்களில் சிவராத்திரி திதி பகலிலும் வரும்; அப்படி வந்தால், அந்த சிவராத்திரி பூஜையை பகலில்தான் செய்ய வேண்டும்; சதுர்த்தசி திதி நேரத்தில் தான் சிவராத்திரி வரும்; மதியம் வரை திரயோதசி திதி இருந்து, அதன் பிறகு, சதுர்த்தசி திதி துவங்கினால், மதியத்திற்குள் உணவு உண்டுவிடவேண்டும்; மதியம் சதுர்த்தசி திதி ஆரம்பித்ததும், சிவராத்திரி பூஜைகளைச் செய்ய வேண்டும்; சிவராத்திரி என்பது இரவில் தான் வரவேண்டும் என்பது அல்ல; இந்த சிவராத்திரி பூஜையால் கொடிய பாவங்கள் என்று நம் நூல்களில் சொல்ல படுகின்ற பெண்களுக்கு இழைத்த துரோகம்; பெண்களுக்கு செய்த சாபம்; பெண்களுக்கு இழைத்த கொடுமைகள் நீங்கும்; அதே போல, ஒரு பெண் தனது கணவனுக்கு துரோகம் செய்திருந்தால், தவறை உணர்ந்து திருந்தி, இந்த சிவராத்திரி பூஜையைச் செய்தால்,கணவனுக்கு செய்த துரோகம் மறைந்துவிடும்; என அகத்தியர் கூறுகிறார்.

மாதமும் சிவராத்திரியும்:-

அனைத்து புண்ணியப் பலன்களையும் இந்த வருடம் வரும் யோக சிவராத்திரி பூஜை தந்துவிடும்; அறிந்து பாவங்கள் செய்திருந்தாலும், அறியாமல் பாவங்கள் செய்திருந்தாலும் அனைத்து பாவங்களையும், கர்மவினைகளையும் அழித்துவிடும் இந்த மாத சிவராத்திரி.

சித்திரை மாதத்தில் வரும் இரண்டு சிவராத்திரிகளிலும் ஒருவன்/ஒருத்தி தனது ஆயுள் முழுவதும் செய்து வந்தால், அங்கங்களின் குறைகள் நீங்கும்; உடலின் குறைகள் நீக்கப்பட்டு, ருத்திர கணங்கள் வந்து சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள்;

வைகாசி மாதத்தில் வரும் இரண்டு சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், நாம் சாப்பிடுகின்ற மருந்து நம் உடலில் ஒட்டும்; சாப்பிடுகின்ற மருந்து உடலில் ஒட்டினால் தான் நம் நோய் நீங்கி ஆரோக்கியம் வரும்;

ஆனி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், தேவதைகள் எல்லாம் நடனம் ஆடி நம்மை வணங்கி தேவலோகத்திற்கு அழைப்பார்கள்:

ஆடி மாதத்தில் வரும் இரு சிவராத்திகளில் பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், அம்பிகையுடன் சேர்ந்து சிவராத்திரி பூஜை செய்த பலன் கிட்டும்;

ஆவணி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜைகளை செய்தால் வேதம் ஓதிய பலன் கிட்டும்; பூணூல் அணிந்து வேதம் ஓதிய பலன் கிட்டும்;மேல் உலகில் வேதம் ஒதியவருக்கு கொடுக்கின்ற மதிப்பைக் கொடுப்பார்கள்:

புரட்டாசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் ஆயுள் முழுக்க பூஜை செய்தால்,செல்வம் பெருகும்;

ஐப்பசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் ஆயுள் முழுக்க பூஜை செய்தால்,நாம் என்றுமே பசியால் வாடித் தவித்து அலைய மாட்டோம்; வாழ்நாள் முழுவதும் பசியால் அவதிப்படமாட்டோம்; அதாவது உணவிற்காக என்றுமே கையேந்தி நிற்கும் நிலை வராது; சிவபக்தன் என்று சொல்லிக் கொள்கின்ற ஒவ்வொருவரும் அவசியம் செய்ய வேண்டியது,

கார்த்திகை மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளிலும் பூஜைகள் செய்திடவேண்டும்; சிவராத்திரி விரதம் இருந்திடல் வேண்டும்; கார்த்திகை மாதத்து சிவராத்திரி பூஜையைப் பற்றி விவரிக்க ஒரு 100 ஆண்டுகள் போதாது;

மார்கழி மாதத்தில் வரும் இரு சிவராத்திரி பூஜையை ஆயுள் முழுக்க செய்தால், பிறருக்காக தவறுகள் செய்ய மாட்டார்கள்: ஒரு மனிதன் அதுவரை செய்த அனைத்துவிதமான தவறுகளையும் அழிக்கின்ற சிவராத்திரி மார்கழியில் வரும் சிவராத்திரியாகும்;

தை மாதத்தில் வரும் இரு சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால்,நெல் முதலான தானியங்கள் நன் கு விளையும்;அள்ளி வழங்கிய தானப் பலன் கிடைக்கும்;

மாசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜையை மனைவி செய்தால், பிற பெண்களை நாடும் கணவன் திருந்திவிடுவான்; கணவன் செய்தால், பிற மாதரை நாடும் எண்ணத்தில் இருந்து நிச்சயம் மீண்டு வர முடியும்;

பங்குனி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜை செய்தால், சிவபெருமானின் பங்குனி உத்திர நடனத்தைக் காணும் அளப்பரிய பாக்கியம் கிடைக்கும்; பங்குனி உத்திர நடனத்தைப் பார்ப்பதற்கு 3 கோடி முறை மனிதப் பிறப்பு எடுத்து சிவசிந்தையோடு வாழ்ந்தால் தான் கிட்டும்; அதை ஒரே ஒரு பிறவி பங்குனி மாத சிவராத்திரி பூஜைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கிடைத்துவிடுகின்றன;

நமது பிறந்த நட்சத்திரமும், சிவராத்திரியும் சேர்ந்து வரும் நாளில் சிவராத்திரி பூஜை+விரதம் இருந்தாலே போதும்; கலியுகத்தில் மானுடப் பிறவி எடுத்தமைக்கான லட்சியத்தை அடைந்துவிட்டதாக அர்த்தம்;

ஒருவேளை பிறந்த நட்சத்திரமும் சிவராத்திரியும் இணைந்து வராவிட்டாலும் கூட, பிறந்த கிழமையும் சிவராத்திரியும் இணைந்து வரும் நாளில் கூட சிவராத்திரி விரதம் இருந்து சிவபூஜை செய்வது மிகுந்த புண்ணியம் தரும்;

நட்சத்திரமும் சிவராத்திரியும்:-

அசுவினியும் சிவராத்திரியும்:
இந்த நாளில் சிவராத்திரி பூஜை செய்தால், அற்புதமான வேலை கிடைக்கும்; (உங்களுக்குப் பிடித்தமான வேலை கிடைக்கும்)
பரணியும் சிவராத்திரியும்: பெற்ற தாய்க்கு உத்தமமாய் கர்மம் செய்த பலன் களைக் கொடுக்கும்;
கார்த்திகையும் சிவராத்திரியும்: முருகக் கடவுளுடன் சேர்ந்து ஈசனைக் கண்ட பலனைக் கொடுக்கும்;
ரோகிணியும் சிவராத்திரியும்: திருமாலே நமக்கு வெண்சாமரம் வீசுவார்;
மிருகசீரிடமும் சிவராத்திரியும்: பசுவிற்கு உணவு இட்ட பலன் கிட்டும்;கோ பூஜை செய்த பலன் கிட்டும்;
புனர்பூசமும் சிவராத்திரியும்: மறுபிறவி(புனர் ஜன்மம்) எடுத்த பலன் கிட்டும்;
பூசமும் சிவராத்திரியும்: ஈசன் அருகே இருக்கக் கூடிய அனுக்கிரகம் கிட்டும்;
ஆயில்யமும் சிவராத்திரியும்: எவ்வளவு வேதனைகள் ஏற்பட்டாலும், அவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ஈசனுக்கு திருப்பாதத் தொண்டு செய்யக் கூடிய மன நிலை கிட்டும்;
பூரமும் சிவராத்திரியும்: நோய்கள் அணுகாது;
உத்திரமும் சிவராத்திரியும்: லோபியாக(கஞ்சனாக) இருந்தாலும், சாந்த நிலை அடைவார்;
சித்திரையும் சிவராத்திரியும்: தேவப் பிறவி கிட்டும்;
பூராடமும் சிவராத்திரியும்: யாரோடும் தேவையில்லாமல் நட்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள்;
சதயமும் சிவராத்திரியும்: அஷ்ட ஐஸ்வர்யங்களோடு (இம்முறை வரும் சிவராத்திரி) இருப்பார்
பூரட்டாதியும் சிவராத்திரியும்: தேவர்களே வணங்குவர்;
உத்திரட்டாதியும் சிவராத்திரியும்: கர்ப்பவாசத்தில் உழல மாட்டார்கள்;
ரேவதியும் சிவராத்திரியும்: இனி பிறவியே எடுக்க மாட்டார்கள்:
இம்மாதம் வருவது சதய நட்சத்திரத்தில் சிவராத்திரி:- இந்த நாளில் விரதமிருந்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்று இந்த பூலோகத்தில் குபேரன் போன்ற வாழ்க்கை வாழ்வார்கள் என சிந்தாமணி நிகண்டு கூறுகிறது.

கிழமையும் சிவராத்திரியும்:-

திங்கள்: சோம்பேறியாகத் திரியும் பிறவி எடுக்க மாட்டார்கள். சுறுசுறுப்பாக இருப்பார்கள். கோவில் கட்டக் கூடிய பாக்கியம் கிடைக்கும்;

செவ்வாய்: அரசாங்க வேலை கிடைக்கும்; சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், மாநில அரசின் மந்திரி அல்லது மத்திய அரசின் மந்திரி பதவி கிடைக்கும்; (இப்பிறவியில் இப்பதவிகளில் இருப்பவர்கள் கடந்த ஐந்து பிறவிகளாக தொடர்ந்து இந்தக் கிழமையில் சிவராத்திரி பூஜை+விரதம் இருந்தவர்களே!!!)

புதன்: திருமாலை பார்த்த பலன் கிட்டும்; அதாவது, திருமால் சங்கு சக்கரத்துடன் சாம கானம் ஓத, காட்சி அளித்து ஆசி கொடுப்பார்;

வியாழன்: குரு கிட்டுவார்; குருவுடன் சேர்ந்து திருப்பணி செய்ய வாய்ப்பு கிட்டும்; சித்தர்கள் அனைவரும் குருவாக வந்து பூரண ஆசியை வழங்குவார்கள்.

வெள்ளி; ஆத்மவிசாரம் செய்வார்கள்; தான் யார் என்பதை உணர வெள்ளிக்கிழமைகளில் வரும் சிவராத்திரியன்று பூஜை+விரதம் இருக்க வேண்டும்; தான் யார்? என்பதை உணர்ந்தவர் ரமண மகரிஷி! தான் என்பது எங்கே இருக்கின்றது? மனதிற்குள் இருக்கின்றது; தான் எங்கிருந்து வருகின்றது? இருதயத்தில் இருந்துதான் வருகின்றது.

வெள்ளிக்கிழமையும் சிவராத்திரியும் வரும் இரவில் தனியாக அண்ணாமலை கிரிவலம் வந்தால் ஆத்மவிசாரம்(நான் யார்? என்பதற்கான விடை) கிட்டும்; என திருவண்ணாமலை தல புராணம் சொல்கிறது.

சனி: சனிபகவானால் ஏற்படும் துயரங்கள் முழுமையாக விலகும்; ஆமாம்! சனிக்கிழமையன்று வரும் சிவராத்திரி விரதம்+பூஜை செய்தால் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனியால் வரும் துயரம் சிறிதும் வராது; நெருங்காது;

ஞாயிறு: சூரியதேவனாகப் பிறக்கலாம்; சூரியப் பதவி கிடைப்பது என்பது மிகவும் அரிதிலும் அரிதான அதிசயம்.

தேய்பிறை சிவராத்திரி:

தொடர்ந்து 12 தேய்பிறை சிவராத்திரி என்பது மாசி மாதம் வரும் மஹாசிவராத்திரியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்; 12 தேய்பிறை சிவராத்திரிகள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;எக்காரணம் கொண்டும் இதில் இடைவெளி விழுந்துவிடக் கூடாது;

அதுவும் சிவராத்திரி இரவில் நள்ளிரவு 12 மணிக்கு கிரிவலம் புறப்பட்டு, மறுநாள் அதிகாலையில் 5.20 முதல் 6.20க்குள் அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்; பிறகே,சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும்;

40 ஆண்டுகளுக்கு முன்பு, வாரம் ஒருமுறை குடும்பத்துடன் குலதெய்வம் இருக்கும் இடத்துக்குச் சென்று வழிபடுவது வழக்கமாக இருந்தது;

20 ஆண்டுகளுக்கு முன்பு, அதுவே மாதம் ஒரு நாள் என்று குறைந்துவிட்டது; இதெல்லாம் சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களால் மட்டுமே பின்பற்ற முடிந்தது; மாநகரங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்களால் இதைக் கூட பின்பற்ற முடியாமல் போனது;

தற்போது, ஆண்டுக்கு ஒருமுறைதான் அதுவும் மஹாசிவராத்திரி எனப்படும் மாசி மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று மட்டுமே குலதெய்வம் கோவிலுக்குச் செல்கிறார்கள்;

ஜாமப்பூஜை:

🍊 ஒரு ஜாமம் என்பது 3 மணி நேரம் ஆகும்; நான்கு ஜாமப் பூஜைகள் சிவராத்திரி இரவில் நடைபெறும்; இதையே நான்கு காலப் பூஜை என்றும் அழைக்கின்றனர்;

முதல் ஜாமப்பூஜை என்ற முதல் கால பூஜை சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை செய்வர்;

இரண்டாம் ஜாமப்பூஜை என்ற இரண்டாம் கால பூஜை இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 மணி வரை செய்வர்;

மூன்றாம் ஜாமப்பூஜை என்ற மூன்றாம் கால பூஜை நள்ளிரவு மணி 12.01 முதல் பின்னிரவு 3.00 மணி வரை செய்வர்;

நான்காம் ஜாமப்பூஜை என்ற நான்காம் கால பூஜை பின்னிரவு மணி 3.01 முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை செய்வர்;

சிவராத்திரி இரவு முழுவதும் சிவாலயம் அல்லது குலதெய்வம் கோவிலில் பின்வரும் மந்திரங்களை ஜபிக்க வேண்டும்; சிவராத்திரிக்கு மறுநாள் பகல் முழுவதும் விழித்திருக்க வேண்டும்; அப்படி இருந்தால் மட்டுமே சிவராத்திரி விரதம் இருந்த பலன் கிட்டும்; எத்தனையோ தருணங்களில் பல்வேறு சொந்த வேலையாக பல நாட்கள் இரவுகளில் இரவு முழுவதும் விழித்திருக்கிறோம்; ஆனால், சிவராத்திரியில் விழித்திருப்பதில்லை; காரணம் சிவராத்திரியின் மகிமையை எடுத்துச் சொல்ல ஆளே இல்லாமல் போய்விட்டனர்;

🍊 நமது தெருவில் யார் யாரோடு_ அல்லது நமது அலுவலகத்தில் யார் யாரோடு __ என்று புறங்கூறுவதையே பெருமையாக நினைக்கிறோமே ஒழிய, சிவராத்திரியின் பெருமைகளைப் பற்றியும், எப்படி சிவராத்திரி பூஜை இருப்பது? என்று எந்த மாத இதழ்களிலாவது வருகிறதா? ம்கூம்!

🌹 முதல் கால பூஜை:-

(சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை) பசும்பால் (கிராமங்களில் தேடிப்பார்த்து வாங்குங்கள்; பாக்கெட் பால் உண்மையான பால் அல்ல); தேன், பசுநெய், பசும் சாணம், கோஜலம் (பசுவின் சிறுநீர்) இவைகள் ஐந்துமே பஞ்சகவ்யம் என்று அழைக்கப்படுகிறது; சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய பஞ்ச கவ்யம் அளித்தவர்கள் யாரும் பஞ்சத்தால் வாடமாட்டார்கள்;
சிவலிங்கத்திற்கு சந்தனப்பூச்சு செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்; இதனால், வேத நாயகனின் ஆசி கிட்டும்; பச்சைப்பயிறு நைவேத்தியமாக வைக்க வேண்டும்; இதனால், பெரும் புண்ணியம் கிட்டும்; இதனால், அவர்களுடைய பிள்ளைகள் நன்றாக வாழ்வார்கள்; எதிர்காலத்தில் தங்கள் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்வார்கள்;

பஞ்சகவ்யம் வாங்கித்தர இயலாதவர்கள், சிவராத்திரி பூஜைக்கு உங்களால் முடிந்த உதவிகளை அருகில் உள்ள சிவாலயங்களுக்கு கொடுக்கலாம்;

இந்த முதல் ஜாமப் பூஜையில் ரிக் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்; ரிக் வேதம் சொல்லத் தெரியாவிட்டால், ரிக் வேதிகளை அழைத்து வந்து ஓதச் சொல்லலாம்;

அதுவும் இயலாதவர்கள் “ஓம்-நமசிவாய” என்ற ஸ்தூல பஞ்சாட்சரத்த்தை இந்த முதல் ஜாமம் முழுவதும் ஜபிக்க வேண்டும்; இதனால்,ருத்ரம், ரிக் வேதம், சாம வேதம் சொன்ன பலன் கிட்டும்;

ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய்ப் புணர்ந்த பின்
ஓம்நமச்சிவாயமே உணர்ந்து உட்கலந்து நிற்குமே!

             *********
இரண்டாம் ஜாம(கால) பூஜை:-

(இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை)

இரண்டாம் ஜாமத்தில் ஈசனை தரிசித்தால், நம்முடைய பிறவி முடிந்து, மீண்டும் மறுபிறவி எடுத்த பலன் கிட்டுகின்றது;

பால், தேன், சர்க்கரை, நெய், தயிர் கலந்த ரச பஞ்சாமிர்தம் ஆகும்; ஈசனாகிய சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும்;
இந்த அபிஷேகத்திற்கு, பால் கொடுத்தால் தாய்ப்பால் இல்லாதவள், தாய்ப்பால் பெறுவாள்; சுத்தமான பசும்பாலில் தான் அபிஷேகம் செய்ய வேண்டும்; காரம்பசுவின் பால் எனில் மிகவும் சிறப்பு; கிறிஸ்தவ ஆங்கிலேயனின் 300 ஆண்டுச் சதிகளால் மாவட்டத்திற்கு ஒரு ஊரில் தான் காரம்பசுவே இருக்கின்றது;

சர்க்கரை கொடுத்தவருக்கு சர்க்கரை நோய் வராது; தயிர் கொடுத்தவருக்கு தயிர் திரண்டு உருவாவது போல, செல்வம் பெருகும்;

சிவலிங்கத்திற்கு அகில் குழம்பு பூச்சு சார்த்த வேண்டும்; இதனால், லட்சுமிதேவி நம்மைவிட்டு விலகாமல் இருப்பாள்; தாமரைப்பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்; நைவேத்தியமாக பாயாசம் வைக்க வேண்டும்; நைவேத்தியத்தை அனைவருக்கும் பகிர்ந்து தரவேண்டும்; இதன் மூலமாக நம்முடைய குழந்தைகள் நற்குணத்துடன் தானாய் வளரும்;

இந்த இரண்டாம் கால பூஜை சமயத்தில் (இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை) யஜீர் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்; க்ருஷ்ண யஜீர், சுக்ல யஜீர் என்று இரு பெரும் யஜீர் வேதப்பிரிவுகள் இருக்கின்றன; இருவருமே கூடி அவரவர் யஜீர் வேதத்தை ஓத வேண்டும்; இதனால்,நாடு சுபிட்சமடையும்; நாமும் நன்றாக இருப்போம்; இன்று தேசபக்தியுடன் கூடிய தெய்வபக்திதான் தேவை;

ஒருவேளை, யஜீர் வேதம் தெரியாவிட்டால் அல்லது யஜீர் வேதம் தெரிந்தவர்கள் கிடைக்காவிட்டால் வருத்தப்பட வேண்டியதில்லை; “சிவாய-நம” என்ற சூக்சும பஞ்சாட்சரத்தை இந்த இரண்டாம் காலம் முழுவதும் ஜபிக்க வேண்டும்;

செம்பு பொன்னாகும் சிவாயநம வென்னீற்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் ஸ்ரீயும்,கிரீயுமெனச்
செம்பு பொன்னான திரு அம்பலமே!

இதையே நமது தாத்தா பாட்டிகள் பழமொழியாக எழுதி வைத்துள்ளனர்; சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு ஒரு நாளும் துன்பமில்லை;

⭐ மூன்றாம் ஜாம(கால) பூஜை:-

(நள்ளிரவு 12 முதல் பின்னிரவு 3.00 மணி வரை)

இந்த காலத்தில் சிவலிங்கத்திற்கு கொம்புத்தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும்; சிவலிங்கத்திற்கு மேல் பூச்சு அரைத்த பச்சைக் கற்பூரம் சார்த்த வேண்டும்; வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்; நைவேத்தியமாக எள் சாதம் படையல் இடவேண்டும்;

சாம வேதம் பாடவேண்டும்; சாமவேதம் தெரியாவிட்டால், “சிவயசிவ” காரண பஞ்சாட்சரத்தை நள்ளிரவு 12 முதல் பின்னிர்வு 3 மணி வரை ஜபிக்க வேண்டும்;

போகின்ற உயிரை நிறுத்தவும், விரும்பிய துவாரத்தின் வழியாக உயிரைச் செலுத்தவும் வல்லது இந்த சிவயசிவ என்ற மந்திரமாகும்;

இதில் இரவு 10.54 முதல் நள்ளிரவு 12.24 மணி வரையிலான நேரத்திற்கு லிங்கோத்பவ நேரம் என்று பெயர்; இந்த நேரத்தில் யார் “சிவய-சிவ; சிவய-சிவ” என்ற காரண பஞ்சாட்சரத்தை ஓதுகிறார்களோ, அவர்களுடைய ஆவி பிரிகின்ற போது அளவற்ற சிவகடாட்சம் உண்டாகும்;

🍁 நான்காம் ஜாம(கால) பூஜை:-

(பின்னிரவு 3.01 முதல் மறுநாள் காலை 6 மணி வரை)

கரும்புச்சாறு கலந்த அபிஷேகம் சிவலிங்கத்திற்குச் செய்ய வேண்டும்; மேல் பூச்சு அரைத்த குங்குமப்பூ பூச வேண்டும்; வில்வத்தாலும், நீலோற்பவ மலர்களாலும் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்; இன்று நைவேத்தியமாக சுத்தமான அன்னம் படையல் இடவேண்டும்; பச்சரிசி சாதம் வடித்து, அதில் குறைந்தது இரண்டு கரண்டி பசுநெய் விடவேண்டும்; இதுவே சுத்த அன்னம் இடவேண்டும்;

அதர்வண வேதம் பாடவேண்டும்; அதர்வண வேதத்தை எட்டு வருடங்கள் குரு அருகில் இருந்தே ஜபித்துப் பழகவேண்டும்; குரு அருகில் இல்லாமல் இந்த அதர்வண வேதத்தின் ரகசிய மந்திரத்தை ஜபித்தால்,உடனே உயிர் உடலைவிட்டுப் பிரிந்துவிடும்;

அதர்வண வேதம் தெரியாவிட்டால், பின்வரும் திருமூலரின் திருமந்திரப் பாடலைப் பாடினால் போதுமானது;

சிவசிவ என் கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
சிவசிவ என்றிட சிவகதி தானே!

இதையும் பாட இயலாதவர்கள் “சிவசிவ” என்ற அதி சூக்சும பஞ்சாட்சரத்தை ஜபித்தாலே போதுமானது; பின்னிரவு 3 மணி முதல் விடிகாலை 6 மணி வரை இப்படி ஜபிக்க வேண்டும்;

இவ்வாறு நான்கு ஜாம(கால) பூஜைகளையும், சிவராத்திரி விரதங்களை யாரொருவர் ஆண்டுகள் செய்கின்றார்களோ, அவர்கள் இறுதியாக வேதியர்களுக்கு ஸ்வர்ண தானம், பூ தானம், கோதானங்களை அன்புடன் செய்ய வேண்டும்; அனைவருக்கும் அன்னதானம் போன்ற தான தருமங்களைச் செய்ய வேண்டும். அதுவும் சிவ தலங்களில் அன்னதானம் செய்ய வேண்டும்; இப்படிச் செய்து முடிப்பவர்கள் முக்தி அடைவார்; அவர்களின் பரம்பரையும் அகத்தியர் பெருமானின் குருவருளோடு சொர்க்கத்தை அடைவார்கள்;

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌕 சிவராத்திரியின் மகிமையை சுக்ரதேசாத்திரியில் சாஸ்திரம் கூறுகின்றது; இதன் படி, மகாசிவ ஆகமங்களும்,சிவபுராணங்களும் விவரிக்கின்றன;
சிவராத்திரி மகிமைகளைக் கேட்டவர் சிவனாய் ஆவார்;
சொன்னவர் சிவன் நாமத்தில் என்றும் திளைப்பார்;
கேட்டு மகிழ்கின்றவரும் சிவனாய் ஆவார்;
இதனைச் செய்கின்றவர்களுக்கு சிவலோகப் பிராப்தம் உண்டு;
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

அபூர்வ சிவ பஞ்சாட்சர மந்திரம்:-

ராவனேஸ்வரன் சிவபூஜையில் கூறிய அபூர்வ அனைத்து வல்லமைகளையும் கொடுக்க கூடிய சிவ பஞ்சாக்சர மந்திரம்.

      அறி ஓம் ஐயும் கிலியும்
      சௌவும் றீயும் ஸ்ரீயும்
      நமசிவய மசிவயந
      சிவயநம வயநமசி
      யநமசிவ ஸ்வாஹா....

(இந்த மந்திரத்தை 1008 முறை சிவராத்திரி இரவில் சிவன் சந்நிதியில் ஜெபித்தால் கேட்ட வரத்தை உடனே சிவபெருமான் அருள்வார் என…. கரூர் மாந்திரிகம் என்ற நூலில் கரூர் சித்தர் கூறியுள்ளார். அவசியம் நம் சித்தர்களின் குரல் அன்பர்கள் எல்லோரும் ஜெபம் செய்யுங்கள். 24 மணி நேரத்துக்கும் கேட்ட பிரார்த்தனை நிறைவேறும். இது கருவூர் சித்தர் வாக்கு.)

ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்

பகிர்ந்தது: திரு. பிரேம்குமார் – திருநந்திக்கரை

________________________

மஹா சிவராத்திரி ! சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் !

சிவனின் படர்ந்த ஜடாமுடியில் இருந்து, ருத்ரதாண்டவம் ஆடும் அவரது காலடி வரை, நமது வாழ்வியல் குறித்தும், பண்பு நலன்கள் குறித்தும் பல விஷயங்கள் சூசகமாகக் கூறப்பட்டுள்ளது. இயல்பாகவே மற்ற கடவுள்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சிவபெருமான் மிகவும் எளிமையான தோற்றம் கொண்டவர். ஆனால், மிகவும் உடல்திறன் வலிமையாகவும், திடகாத்திரமாகவும் காட்சியளிக்கும் கடவுளாக திகழ்வார் சிவபெருமான். இதிலிருந்து, எளிமையாக இருப்பவர்களின் வாழ்க்கை தான் நல்ல உயர்வான, திடமான நிலைக்கு செல்லும் என நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

| ஜடாமுடி |

சிவபெருமானின் நேர்க்கொண்டு உயர்ந்து காணும் ஜடாமுடியின் மூலம், ஒருமுகமாக இருக்கும் உடல், மனம் மற்றும் ஆத்மா உங்களது உடல்நிலையையும், மனநிலையும் அதிகரிக்க செய்யும் மற்றும் உங்களை அமைதியான நிலையில் ஆட்கொள்ள உதவும். உங்கள் செயல்களில் ஒருமுகத்தோடு செயல்பட பயன்தரும்.

| நெற்றிக்கண் |

சிவபெருமானின் நெற்றிக்கண் நமக்கு கூறுவது என்னவெனில், நமக்கு பின்னால் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்க்கொண்டு அதை தகர்த்தெறிந்து, முடியாது என்பனவற்றையும் முடித்துக் காட்ட வேண்டும் என்பதே ஆகும்.

| திரிசூலம் |

திரிசூலம் மூலமாக நாம் அறிய வேண்டியது, நமது மனது, அறிவாற்றல், தன்முனைப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தினோம் எனில் நமது வேலைகளில் சிறந்து செயல்பட இயலும் மற்றும் தோல்விகளைத் தகர்த்தெறியலாம் என்பனவாகும்.

| ஆழ்ந்தநிலை |

சிவபெருமானின் ஆழ்நிலை உருவின் மூலமாக, நாம் அமைதி மற்றும் பொறுமையைக் கையாளும் போது, நமது தினசரி பிரச்சனைகளையும், கவலைகளையும் எளிதாக கடந்து தெளிவான மனநிலை பெறலாம் என்பதே ஆகும்.

| சாம்பல் |

சிவபெருமானின் தேகத்தில் இருக்கும் சாம்பல் நமக்கு உணர்த்துவது, நம் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் அல்ல, அனைத்தும் கடந்து போகும். அதனால் எதற்காகவும் மனக்கவலைப்படாமல், துயரம் கொள்ளாமல் உங்கள் தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து வாருங்கள் என்பதே ஆகும்.

| நீலகண்டம் |

சிவபெருமானின் நீல நிற தொண்டையின் மூலம் நாம் அறியவேண்டியது, நமக்கு எவ்வளவு கோபம் வந்தாலும், அதை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அதை மற்றவர் மீது திணித்து (விஷ சொற்களாக), உங்கள் நிலையை நீங்களே குறைத்துக் கொள்ள கூடாது, என்பதே ஆகும்.

| உடுக்கை |

சிவபெருமானின் உடுக்கையின் மூலமாக, உங்கள் உடலின் அனைத்து எண்ணங்களையும் ஒருமுகமாக செயல்படுத்தும் போது, உங்கள் உடல் சுத்தமாகி, நோயின்றி வாழ உதவுகிறது என்பதே ஆகும்.

| கங்கை |

சிவபெருமானின் தலையில் இருக்கும் கங்கை நமக்கு உணர்த்துவது, உங்களது அறியாமையின் முடிவில் ஒரு தேடல் பிறக்கிறது. அந்த தேடலில் இருந்து தான் உங்களுக்கான புதிய வழி தென்படுகிறது என்பதே ஆகும்.

| கமண்டலம் |

சிவபெருமானின் கமண்டலம் மூலம் நாம் அறிய வேண்டியது, நமது உடலில் இருந்து தீய எண்ணங்களையும், எதிர்மறை எண்ணங்களையும் தவிர்த்தோம் என்றால் நாம் நல்ல நிலையை எட்ட முடியும் என்பதே ஆகும்.

| நாகம் |

சிவபெருமானின் கழுத்தை சுற்றி இருக்கும் நாகம் மூலமாக நாம் உணர வேண்டியது, நம்முள் இருக்கும் ‘நான்’ எனும் அகங்காரத்தை விட்டுவிட்டால், உங்கள் மனநிலையும் மற்றும் உடல்நிலையும் மேலோங்கும் என்பதே ஆகும்…

தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி !


வேடன் சிவபூஜை செய்த கதை!

ஒரு காட்டில் சண்டன் என்ற ஒரு வேடன் வாழ்ந்து வந்தான்; அவன் காட்டில் வேட்டையாடுவதையே தொழிலாகக் கொண்டிருந்தான். காட்டில் அலையும் விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடிப் பிடித்து, அவற்றை விற்று ஜீவனம் செய்து வந்தான். அவனுக்கு சண்டிகா என்ற மனைவி இருந்தாள். ஒருநாள் அடர்ந்த காட்டிற்குள் விலங்குகளைத்தேடி அலைந்து கொண்டிருந்தபோது, வானுயர்ந்த ஒரு பெரிய வில்வ மரத்தினடியில், அழகிய சிவலிங்கம் ஒன்று புதியதாய்த் தோன்றி இருப்பதைக் கண்டான். அது ஒரு சுயம்பு லிங்கம். சிவலிங்கத்தைக் கண்டதும் அவனுக்கு மெய்சிலிர்த்தது. அவனுள் அன்பும் பக்தியும் பெருகி அவனையுமறியாமல் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகிவழிந்தது. அவன் உள்ளம் பெறற்கரிய பெருஞ்செல்வத்தைப் பெற்றதுபோல் குதூகலத்தால் குதித்துக் கூத்தாடியது. தானே தோன்றிய சிவலிங்கத்திற்கு பூஜை எப்படிச் செய்ய வேண்டும்? இறைவனை எப்படி வணங்க வேண்டும்? என்ற விவரமெல்லாம் அவனுக்குத் தெரியாது. எதுவுமே தெரியாத ஒரு அப்பாவி வேடன் அவன். அப்போது அங்கே சிங்க கேது என்ற மன்னன் வந்தான். வேட்டையாட கானகம் வந்தவன், தன் பரிவாரங்களைப் பிரிந்து, வழிதெரியாமல் அலைந்து கொண்டிருந்தவன், வேடன் சண்டன் இருக்குமிடம் வர நேர்ந்தது. வேடனைக் கொண்டு கானக வழியைக் கண்டுபிடித்து வெளியேறி விடலாம் என நம்பினான். மன்னன் சிங்ககேது வந்ததைக்கூட அறியாமல் சிவ லிங்கத்தையே பார்த்துக் கொண்டிருந்த சண்டனைப் பார்த்து, வேடா, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? வழி தவறி வந்து விட்டேன். காட்டைவிட்டு வெளியேற வேண்டும். வழிகாட்டு! என்று கேட்க, மன்னன் குரல் கேட்டு சண்டன் உணர்வு வரப்பெற்றான்.

அரசே, என்னை மன்னியுங்கள். பாராமுகமாய் இருந்து விட்டேன். என்னுடன் வாருங்கள் வழிகாட்டுகிறேன்! என்றான். தொடர்ந்து, மகாராஜா, இங்கே இருக்கும் சிவலிங்கத்தை எப்படி பூஜிக்க வேண்டும் என்பதை எனக்கு விளக்கமாய் கூறுங்கள்! என்று மிகுந்த பணிவுடன் மன்னனிடம் கேட்டான் சண்டன். உடனே மன்னன் பரிகாசமாய், வேடனே, உன் தோல் பையில் தண்ணீர் கொண்டு வந்து சிவலிங்கத்தின்மீது ஊற்று. சுடலையில் வெந்த சாம்பலைக் கொண்டு வந்து சிவலிங்கத்துக்குப் பூசு. கைக்குக் கிடைக்கிற பூக்களையெல்லாம் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மேல் வை. நீ உண்ணும் உணவைக் கொண்டு வந்து நிவேதனமாக வை. விளக்கேற்றிவை. இரு கை கூப்பிக் கும்பிடு போடு! என்று அலட்சியத்தோடு கூறினான். மன்னன் சொன்ன விவரங்களையெல்லாம் சண்டன் கவனமாகக் கேட்டுக் கொண்டான். மன்னன் சிங்ககேது கூறியதையெல்லாம் அப்படியே மனதில் பதித்துக் கொண்டான் சண்டன். தோற்பையில் தண்ணீர் கொண்டுவந்து சிவலிங்கத்தின்மீது ஊற்றினான். சுடலையைத் தேடிச் சென்று, கை நிறைய வெந்த சாம்பலை அள்ளிக்கொண்டு வந்து சிவ லிங்கத்தின்மீது பூசினான். கைக்குக் கிடைத்த காட்டுப் பூக்களையெல்லாம் கொண்டுவந்து சிவலிங்கத்தின்மீது வைத்தான். தான் உண்ணும் உணவையே நிவேதனமாகப் படைத்தான். விளக்கேற்றி வழிபட்டான். இதனையே உறுதியாகக் கொண்டு தினமும் பூஜை செய்து வந்தான். இரவும் பகலும் அவன் நினைவில் சிவலிங்கமே நிறைந்திருந்தது. ஒரு நாள் சுடலையின் வெந்த சாம்பல் அகப்படாமல் போயிற்று. சிவபூஜை தடைப்பட்டது. இதனால் சண்டன் மிகுந்த கவலையுடன் இருந்தான்.

உண்ணாமல் உறங்காமல் உற்சாகமின்றிக் காணப்பட்டான். அவனுக்கு எதுவுமே சொல்லத் தோன்றவில்லை. இதனை அவனது கற்புடைய மனைவி சண்டிகா அறிந்து மனம் மிக நொந்தாள். கணவனை நோக்கி, அன்பரே, நீங்கள் சிவபூஜையைத் தொடர்ந்து செய்ய ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நாம் குடியிருக்கும் இந்தக் குடிசையைக் கொளுத்தினால், நான் அதில் விழுந்து வெந்து சாம்பலாவேன். அந்த சாம்பலை எடுத்துக்கொண்டு போய் சிவலிங்கத்திற்குப் பூசுங்கள். உங்கள் விருப்பப்படியே பூஜையும் இனிதே நடக்கும் என்றாள் சண்டிகா. கள்ளங்கபடமில்லாத சண்டனும் அப்படியே செய்து முடித்தான். பூஜை முடிவில் வழக்கப்படி நிர்மால்யம் கொண்டு போனான். அன்று சிவராத்திரி என்று அவனுக்குத் தெரியாது. மெய் மறந்து வழிபட்ட நிலையில், அவன் செய்த புண்ணியத்தால், இறைவன் அவன் முன் தோன்றி அருள்பாலித்தார். அவன் மனைவி சண்டிகாவை உயிர்ப்பித்தார். குடிசையும் முன்பு இருந்தது போலாயிற்று. வேடன் சண்டன் ஞானம் வரப்பெற்றவனாய் இறைவனைப் போற்றினான். சிவகணங்கள் எதிர்கொள்ள கயிலையை அடைந்தான் என்று, சிவராத்திரியின் பெருமை பற்றிக் கூறும் பிரம்மோத்திர காண்டமும் வரதபண்டிதம் என்ற நூலும் விவரிக்கின்றன. எதுவும் தெரியாமலும் தன்னை அறியாமலும் செய்யும் சிவராத்திரி வழிபாடு கூட பலன்தரும். இப்படி அறியாமல் செய்த பூஜைக்கே பலனுண்டு என்றால் சிவராத்திரியை அறிந்தே பூஜை செய்பவர்களுக்கும், ஆலயம் சென்று முறையே வழிபாடு செய்பவர்களுக்கும் புண்ணியம் வந்துசேரும்.

அருவமும் உருவமும்ஆனாய் போற்றி !
மருவிய கருணை மலையே போற்றி !

தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி !


சிவாலயம் சம்பந்தமாக மூன்று விதமான கதைகள் உண்டு அனைத்தும் போதிப்பது சைவ வைணவ ஒற்றுமையே..

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள்கோயிலை சுற்றி இந்த 12 கோயில்களும் உள்ளன அதற்கும் ஒரு கதை உண்டு..

குமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க “சிவாலய ஓட்டம்’ வரும் பத்தாம் தேதி மாலை முதல் துவங்குகிறது. குமரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் இனிய பகுதி. ஐவகை நிலங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு வளமான நிலப்பகுதிகளும் அமைந்த வளமான பூமி. இப்படி பல்வேறு சிறப்பு வாய்ந்த குமரி மாவட்டத்தில் மட்டுமே “சிவாலய ஓட்டம்’ என்னும் மகாசிவராத்திரி விழா நடந்து வருவது மிகவும் சிறப்பு மிக்கது. இந்த சிவாலய ஓட்டமானது சிவராத்திரிக்கு முன்தினம் முன்சிறை, திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து துவங்குகிறது. சிவாலய ஓட்டம் குறித்து பக்தர்களிடம் பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன. இதில் ஒன்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் தல புராணத்தோடு தொடர்புடையது. ஒரு சமயம் பிரம்மா யாகம் செய்தார். அப்போது, பிரம்மாவிற்கு திடீரென அகங்காரம் ஏற்பட்டது. அதனால், விஷ்னுவின் தூண்டுதலால் பிரம்மாவின் நாவில் வாணிதேவி அமர்ந்து, மந்திர உச்சாடனத்தைப் பரளச் செய்தார். இதனால், யாககுண்டத்தில் இருந்த தீபகேசி வடிவாக கேசன் என்ற அரக்கன் தோன்றி, பிரம்மாவிடம் மரணம் இல்லாதிருக்க வரம் பெற்றான். பன்னர், மலையபர்வதத்தில் இருந்த கவுடில்யன் என்னும் அரசனைக் கொன்று, அந்நாட்டை தனதாக்கிக் கொண்டான் கேசன். தொடர்ந்து தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். கேசன் ஆட்சியின் கீழ் மூவுலகமும் வந்தது. அவனது கொடுமையைப் பொறுக்க முடியாமல் தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணு கருட வாகனம் ஏறி கேசனுடன் போரிட்டார். ஆனால், அவனை அழிக்க முடியவில்லை. அப்போது பராசக்தி வழிகாட்டுதலுடன், விஷ்ணு கேசனை வீழ்த்தி ஆதிசேஷனின் அரணுக்குள் அகப்படச் செய்தார். ஆனாலும், கீழே விழுந்த கேசனின் 12 கைகளும் பாம்பணைக்கு வெளியே விழுந்து கிடந்தன. அந்த கைகளால் அகப்படும் மனித உயிர்களைப் படித்து கேசன் வதம் செய்து, பேரழிவுகளை ஏற்படுத்தினான். கேசன் சிவபக்தன் என்பதால் 12 கைகளிலும் 12 சிவலிங்கங்களைப் பரதிஷ்டை செய்தார் விஷ்ணு. இதனால், கேசன் தீமை செய்ய முடியாமல் செயலற்றுப் போனான். இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட 12 சிவலிங்கங்களே தற்போது 12 சிவாலயங்கள் என புராணக் கதை கூறுகிறது. இதேப்போன்று சிவாலய ஓட்டத்திற்கு காரணமாக இன்னொரு புரணக்கதையும் கூறப்படுகிறது. சிவ பக்தனான ஒரு அசுரன் சிவனை வேண்டி திருமலையில் (சிவாலயத்தில் முதல் கோயில்) கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவன் அவன் முன் தோன்றி, வேண்டிய வரம் தருவதாகக் கூறினார். அந்த அரக்கன் தான் யாருடைய தலையைத் தொட்டாலும் அவன் சாம்பலாகிப் போய்விட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டான். சிவனும் அந்த வரத்தை அளித்தார். வரம் உண்மையிலேயே தனக்குத் தரப்பட்டதா? அது பலிக்கிறதா? என்று சோதனை செய்ய முயன்றான் அரக்கன். அதை அறிய சிவனின் தலையைத் தொட முயற்சித்தான். ஆனால், சிவன் அங்கிருந்து “கோபாலா, கோவிந்தா’ என்று அழைத்த வண்ணம், ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிந்தார். இறுதியில், நட்டாலத்தில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுக்கிறார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கனை, நாட்டியம் ஆடி, அவன் கையால் அவன் தலையைத் தொடச்செய்து அழிக்கிறார் விஷ்ணு. இவ்வாறு சிவன் ஓடி ஒளிந்த 12 இடங்களில் சிவனுக்குக் கோயில் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு, சிவன் ஓடிய ஓட்டத்தை நினைவு படுத்தும் வகையில் தான் சிவாலய ஓட்டம் நடப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோல் மற்றுமொரு கதையும் உள்ளது. ஒருமுறை பகவான் கிருஷ்ணன் ராஜகுரு யாகத்திற்காக புருஷாமிருகத்தின் (வியாக்பாத மகரிஷி) பால் கொண்டு வர, பஞ்சபாண்டவர்களில் ஒருவராகிய பீமனிடம் வேண்டினார். பீமனும் பகனானின் கோரிக்கையினை ஏற்றார். பகவான் 12 ருத்திராட்சங்களை பீமனிடம் கொடுத்து, புருஷாமிருகம் சிறந்த சிவபக்தி உடையது. அது திருமாலின் நாமத்தைக் கேட்டால் சினம் கொள்ளும் என்றும் கூறி எச்சரித்தார். அந்த மிருகத்தால் ஆபத்து வரும் தருவாயில், ஒரு ருத்திராட்சத்தைத் தரையில் போட்டுவிட்டு ஓட வேண்டும், என்று கூறி பகவான் கிருஷ்ணன் பீமனை வழியனுப்ப வைக்கிறார். பீமனும், பகவானிடம் விடைபெற்று புருஷாமிருகத்தைத் தேடி வந்தார். திருமலையின் அடர்ந்த காட்டுப்பகுதியில் புருஷாமிருகம் தவம் இருப்பதைக் காண்கிறார். சிவனை நோக்கி கடும் தவம் இருக்கும் புருஷாமிருகத்திடம் “கோபாலா, கோவிந்தா’ என்று திருமாலின் நாமத்தை பீமன் கூற, சினமடைந்த புருஷாமிருகம் பீமனை விரட்டுகிறது. அப்போது பகவான் கிருஷ்ணன் கூறியதைப் போல ஒரு ருத்திராட்சத்தைத் தரையில் போட்டுவிட்டு ஓடுகிறார் பீமன். அப்போது, அந்த ருத்திராட்சம் சிவலிங்கமாக உருவாகிறது. உடனே, புருஷாமிருகம் சிவலிங்கத்தைத் தொழுது, பன்னர் பீமனை விரட்டுகிறது. இதுபோன்று, 11 ருத்திராட்சங்களையம் தரையில் போட்டு விட்டு, நிறைவாக நட்டாலம் பகுதியில் ருத்திராட்சம் போடப்படுகிறது. அங்கும் சிவலிங்கம் தோன்றியது. அவ்விடத்தில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாகத் தோன்றி ஹரியும், ஹரனும் ஒன்றே என்பதை உலகிற்கு உணர்த்தினர். நட்டாலம் ஆலயத்தில் மூலவர் சங்கரநாராயணராக காட்சி தருகிறார். இங்கு ஒரே விக்ரகத்தில், ஒரு பாதியில் சிவன் உடுக்கையுடனும், மறுபாதியில் விஷ்ணு சக்ராயுதத்துடனும் காட்சி தருகின்றனர். இந்த நிகழ்ச்சியினை, பக்தர்கள் ஆண்டு தோறும் சிவாலய ஓட்டமாக ஒடுகின்றனர். சிவாலய ஓட்டம் நடைபெறும் 12 சிவாலயங்களும் விளவங்கோடு, கல்குளம் தாலுகாவில் அமைந்துள்ளன. முன்சிறை திருமலை மகாதேவர் கோயில், திக்குறிச்சி சிவன் கோயில், திற்பரப்பு மகாதேவர் கோயில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில், பொன்மனை தீம்பலான்குடி மகாதேவர் கோயில், திருப்பன்னிப்பாகம் சிவன் கோயில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோயில், மேலாங்கோடு சிவன் கோயில், திருவிடைக்கோடு மகாதேவர் கோயில், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில், திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயில் என வரிசையாக 12 சிவாலயங்கள் இந்த சிவாலய ஓட்டத்தில் இடம் பெறுகின்றன. சிவாலயங்களில் சிவராத்திரிக்கும் முன்தினம் மாலை முதல் பக்தர்கள் “கோபாலா, கோவிந்தா’ என்ற கோஷத்துடன் ஓடி தரிசனம் செய்வர். முன்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து ஒன்பது கி.மீ., தூரத்தில் உள்ள திக்குறிச்சி சிவன் கோயில் இரண்டாவது சிவாலயமாகும். திக்குறிச்சியில் இருந்து அருமனை, களியல் வழியாக 14 கி.மீ., தூரத்தில் திற்பரப்பு மகாதேவர் கோயில் உள்ளது. அங்கிருந்து குலசேகரம் கான்வென்ட் ஜங்ஷன் வழியாக எட்டு கி.மீ., தூரத்தில் திருந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில் உள்ளது. திருந்திக்கரையில் இருந்து குலசேகரம் கான்வென்ட் ஜங்ஷன் வழியாக ஏழு கி.மீ., தூரத்தில் பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோயில் உள்ளது. பொன்மனையில் இருந்து 11 கி.மீ., தூரத்தில் திருப்பன்னிப்பாகம் சிவன் கோயில் உள்ளது. அங்கிருந்து ஆறு கி.மீ., தூரத்தில் கல்குளம் நீலகண்டசுவாமி கோயில் உள்ளது. கல்குளத்தில் இருந்து மூன்று கி.மீ., தூரத்தில் மேலாங்கோடு சிவன் கோயில் உள்ளது. அங்கிருந்து ஐந்து கி.மீ., தூரத்தில் திருவிடைக்கோடு மகாதேவர் கோயில் உள்ளது. திருவிடைக்கோட்டில் இருந்து ஆறு கி.மீ., தூரத்தில் திருவிதாங்கோடு மகாதேவர் கோயில் உள்ளது. திருவிதாங்கோடு கோயிலில் இருந்து ஐந்து கி.மீ., தூரத்தில் திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்து ஐந்து கி.மீ., தூரத்தில் திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயில் உள்ளது. 12 சிவாலயங்களையும் பெரும்பாலான பக்தர்கள் ஓடியே தரிசிக்கின்றனர். முன்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து துவங்கி திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில் வரை உள்ள 11 கோயில்களிலும் பக்தர்களுக்குப் பிரசாதமாக திருநீறு வழங்கப்படுகிறது. நட்டாலம் சங்கரநாராயணர் கோயிலில் பிரசாதமாக சந்தனம் வழங்கப்படுகிறது.

கட்டுரை பகிர்ந்தது –  Thiru. Satheeshkumar Thripparappu.

🚩✡#மகாசிவராத்திரிசிறப்புபதிவு✡🚩

✡மஹா சிவராத்திரி எதனால் கொண்டாடபடுகிறது?

✡ இரவு முழுவதும் ஏன் கண் விழிக்க வேண்டும்?

✡இரவு முழுவதும் ஏன் தீபங்கள் ஏற்ற வேண்டும்?

✡#சிவராத்திரி என்பது விழா அல்ல!
அது, மனதைக் கட்டுப்படுத்தும் #மகாவிரதம்.
அதனால், இதைக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதை விட, அனுஷ்டிக்கிறோம் என்று சொல்வதே சரி.

✡சிவராத்திரி என்றால் பட்டினி கிடப்பது, கண்விழிப்பது, கோவிலுக்குப் போவதுடன் நின்று விடாமல், இதன் தத்துவம் உணர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தால், வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.

✡நம் மனம் சந்திரனின் இயக்கத்தை பொறுத்து செயல்படுகிறது. சந்திரன் வளரும் நாட்கள் 15. தேயும் நாட்கள் 15. இதில் தேய்பிறையின், 14வது நாள், அதாவது, அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரன் ஏறத்தாழ மறைந்துவிடும். நம் மனமும் இப்படித்தான்… ஒருநாள், ஒன்றை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை பொங்கும். அடுத்த நாளே, ‘அது எதற்கு, அதனால் என்ன பயன்…’ என எண்ணி, அந்த எண்ணம் தேய்ந்து போகும். மறுநாளே, ’விட்டேனா பார்…’ என்று, அதே ஆசையின் மீது லயிக்க ஆரம்பித்து விடும்; இப்படி நிலையில்லாமல் இருப்பது மனம்.

🚩சிவராத்திரியை ஏன் தேய்பிறையின்,14 ஆம் நாள் அனுஷ்டிக்கின்றனர் தெரியுமா🚩

மனித மனம், ஒரு நிலைப் பட தியானம் அவசியம். அலைபாயும் மனதை, சிவத்தின் மீது வைத்து, எங்கும் போகாமல் கட்டிப் போட வேண்டும். அப்படி கட்டிப் போட்டாலும், அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரனின் சிறு கீற்றுப் போல, மனதின் ஏதோ ஒரு மூலையில் முந்தைய ஆசை எண்ணங்களின் சிறு வடிவம் புதைந்து தான் இருக்கும். அதையும் ஒழித்தால் தான், நாம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடையமுடியும். அதற்காக சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி. இந்த தத்துவத்தை உணர்த்தத்தான், சிவனை லிங்க வடிவில் படைத்தனர் நம் முன்னோர். லிங்கத்தின் பாணம் ஏறத்தாழ முட்டையின் வடிவில் இருக்கும். ஒரு முட்டை படம் வரையுங்கள். அதற்கு முதலும் இல்லை, முடிவும் இல்லை. சுற்றிச் சுற்றிபோய்க் கொண்டே இருக்கும். அதே போன்றுதான் சிவனும்,

முதலும்_முடிவும் இல்லாதவர்.

✡மனிதர்களுக்கு அப்படி இல்லை. நமக்கு பிறப்பு என்னும் முதலும், மரணம் என்னும் முடிவும் இருக்கிறது. இது, நாம் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பல பிறவிகளைத் தருகின்றன. சிலர் ஏழு பிறவி என்று மனிதர்களுக்கு கணக்குச் சொல்வர். ‘எழுபிறவி’ என்பதே சரி! நம் பாவக்கணக்கு கரையும் வரை, மீண்டும் மீண்டும் பூமியில் எழுந்து கொண்டே இருப்போம். பிறவிச் சூழலில் இருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா என்றால், இருக்கிறது… அதற்கு ஒரு மந்திர வார்த்தையைச் சொல்லியிருக்கின்றனர் முன்னோர்… அதுதான், ‘அன்பே சிவம்!’ பிற உயிர்களையும் தம்மை போல கருதி அன்பு செலுத்த வேண்டும்.

🚩ப்ரதோஷத்தின் அடுத்தநாள் சிவராத்திரியைக் கொண்டாடுவதன் சூட்சுமம் என்ன🚩

புராணம் சொல்லியிருப்பதை முதலில் பார்ப்போம். என்றும் அழிவே இல்லாமல் அமிர்தம் கடையப்படுகிறது. கடைபவர்கள் தேவர்களும் அசுரர்களும். மந்தார மலை மத்து, கடையும்போது முதலில் ஆலம், காலம் என்கிற இரண்டு விதமான விஷம் வருகிறது. உலகமக்களை இரட்சிக்கும் பொருட்டு சிவன் அதை பருகுகிறார். உமையாளாகிய சக்தி அதைக்கண்டத்தில் நிறுத்தி வைக்கிறார். எனவே சிவன் திருநீல கண்டர் என்று போற்றப்படுகிறார். ஆனால் இதற்குப் பின்னால் தெளிவான யோக விஷயங்கள் மறைந்துள்ளன.

🚩முதலில் நந்தியின் கொம்பின் நடுவில் நின்று தாண்டவமாடுவது குறித்துப் பார்ப்போம்🚩

✡திருமந்திரத்தில் ,
‘ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே”

✡இந்தபாடலை படிக்கும் போது ஒரு சந்தேகம் வரக்கூடும். வினாயகர் சிவனின் மகன்தானே? நந்தி மகன் என்று போடப்பட்டிருக்கிறதே என்று. சிவபெருமானே நந்தி தேவனாக குருவாக வந்தார் என்றும் சொல்வார்கள். அப்படி என்றால் வாகனமாகக் காட்டுவது எதனால் ?

✡இதில் உள்ள சூட்சுமத்த நந்தனாரின் பாடலில் ஒரு வரியில் கேட்கலாம். அதாவது அவரைக் கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் ஜாதியில் குறைந்தவர். ஆனால் பக்தியில் அவருக்கு ஈடு சொல்ல அன்று யாருமே இல்லை. சரி வாசலில் நின்று எட்டிப் பார்க்கலாம் என்றால், இந்த நந்தி மறைக்கிறது. அதை அவர் ”நான் செய்த பாவங்களல்லவா இப்படி நந்தியாக வந்து குறுக்கே நிற்கிறது ” என்பார். ஆக சிவபெருமானை நாம் அடையத் தடையாக உள்ள வினைகள் எங்கே இருக்கும்? நம் உயிர் சக்தியில் பதிந்திருக்கும். அந்த உயிர் சக்தியே நமக்குள் இருக்கும் நெருப்பாகிய குண்டலினி ஆகும். அதாவது நம் தீ என்பதே நந்தி என்றழைக்கப்படுகிறது. அசையாமல் இருக்கும் பேராற்றல் சிவம் அவரே இயக்கும் வல்லமையுள்ள சக்தியாகி நம் உடலில் உயிராக விளங்குகிறார். இதையே குண்டலினி சக்தியாகிய நந்தியின் மேலேறி அமர்ந்திருப்பது போல் காட்டப்படுகிறது. வினாயகர் பார்வதியின் பிள்ளை தான் என்று சொல்வார்கள்.

✡சிவத்தின் சக்தி அம்சமே குண்டலினியாகி நம் மூலாதாரத்தில் உறைகிறது. எனவேதான் மூலாதாரத்தின் தேவதையாக கணபதியைக் குறிப்பிடுவார்கள். வினாயகரின் உருவமே யோகத்தை உணர்த்துவது என்பதை வினாயகர் அகவல் மூலம் ஔவை நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

✡குண்டலினியானவளை உச்சிக்கு ஏற்றி
சிவத்தோடு கலக்கும் போது அமிர்தம் உண்ணலாம். குண்டலினி உச்சியில் இருக்கும் போது உச்சியில் சிவதாண்டவம் காணலாம்.எல்லாமே யோக விஷயங்களின் குறிகாட்டிகளாகவே திகழ்கின்றன.

✡பாற்கடல் நம் உடல், நம் முதுகுத் தண்டே மந்தாரமலை, வாசி எனப்படும் சுவாசமே வாசுகி, இடகலை, பிங்கலை என்பது தேவர்கள், அசுரர்கள். வாசி யோகத்தின் மூலம் தவம் செய்யும் போது குண்டலினியானவள் மேலேரும் போது முதலில் நமது பாவ வினைகள்தான் மேலேறும். அது அனாகதம் வரும் போதே அதாவது ஆத்ம லிங்க தரிசனம் காணும் போதே இறையாற்றலோடு கலக்கும், அவ்வாறு கலந்தால் எல்லா தவப் பலனும் வீணாகிவிடும் என்று குண்டலினி தேவியானவள் அதை விசுத்திக்கு மேலேறாமல் தடுத்து விடுவாள். விசுத்திக்கு மேலே பாவம் நீங்கிய சுத்த சக்தியே சிவத்தோடு ஒன்று சேர்ந்து சாதகனுக்கு அமிர்தம் கிடைக்கச்செய்யும்.

✡ பிரதோஷம் என்றால் பகல் முடிந்து சூரியன்அஷ்தமிக்கும் காலம் என்பார்கள். அதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அதாவது ஒடுங்கும் நேரம். எல்லா புலன்களும் ஓடுங்கி மகாசக்தி மேலேறும் நேரம். ஶ்ரீவித்யை மார்க்கத்தில் தோள்கண்டம், நீள் கண்டம் என்று சொல்வார்கள். அண்டத்தையும் , பிண்டத்தையும் இணைக்கும் கண்டமாகிய தொண்டைப்பகுதியைக் குறித்துசொல்வார்கள். பக்தர்களை இரட்சிக்கும் படிக்கு அவர்களது பாவமாகிய விஷத்தை சிவன் ஏற்றுக் கொள்வார். ஆனால், மகா சக்தியானவள் அது மேலேறினால் எல்லாம் கெடும் என்று அதை கண்டத்தில் நிறுத்திவிடுவாள்.

✡ஆக பிரதோஷ வேளையில் (ஒடுங்கும் நேரத்தில்) நமது பாவங்களை சிவன் ஏற்றுக் கொள்வார் என்றுதான் பிரதோஷமும். இதற்கு முன்னால் ஒடுங்கியவர்களின் (நம் முன்னோர்களின்) பாவத்தை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும். பூமியில் உள்ளவர்கள் காலத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு சந்திரனைத் தேய்து வளரச் செய்து அருளியதற்காகவும், அவ்வாறு தேயும் போது அமாவாசையை ஒட்டிய காலங்களில் ஏற்படும் பலவீனத்தை சரி செய்வதற்காகவும், சிவராத்திரி பூஜை எற்படுத்தப்பட்டது.

✡நீங்கள் மேல் நாடுகளில் உள்ளவர்களைக் கேளுங்கள் பதிமூன்றாம் நாள், அல்லது எண்ணைக் கண்டு பயப்படுவார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், நம் முன்னோர்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. பதி மூன்றாவது நாளான (திதி) அன்று பிரதோஷ வேளையில் பூமிக்கு வானில் இருந்து விஷத்தன்மையும், தீயசக்திகளும் வருவதாக நம்பிக்கை இருக்கிறது. அந்த வேளையில் பூஜை செய்து உலகை காக்க வேண்டுவதே பிரதோஷ பூஜை என்றும். அந்த நேரத்தில் முறைப்படி அதாவது ஆகமவிதிப்படி கட்டப்பட்ட கோவிலில் இருந்தால் அந்த விஷத்தன்மை உள்ள தீயசக்தியின் பாதிப்பு ஏற்படாது என்றகருத்தும் நிலவுகிறது .

✡எது எப்படியோ எல்லா பாதைகளும் வழிபாடுகளோ, யோகமோ எதுவாயினும் பலன் இறைவனை அடைவதே. என்ன சற்று முன் பின்னாக அமையும். சிவ இராத்திரி எதனால் என்று புராணக்கதைகள் கேட்டிருக்கிறோம். ஒரு வேடன் புலிக்கு பயந்து மரத்துக்கு மேலே ஏறி அமர்ந்திருந்ததும், அது வில்வ மரம் என்பதும், தூக்கம் வராமல் இருக்க ஒவ்வொரு இலையாகப் பறித்து கீழே போட்டுக்கொண்டிருக்க, அது கீழே இருக்கும் சிவலிங்கத்தில் விழுந்ததனால், அவனுக்கு சிவ தரிசனம் கிடைத்தது, அதுவே சிவராத்திரி எனக் கொண்டாடப்படுகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
மற்றொரு புராணமும் உண்டு. நான்கு முகம் கொண்ட அயனும், திருமாலும் தங்களுக்குள்சொற்போரிட்டுத் தன்னை தேடின பொழுது, சிவ பெருமான் திருவுளம் கொண்டு மாசித் திங்கள் பதினான்காம் நாள் திங்கட்கிழமை திருவோணம் கூடிய நல்ல நாள் இராத்திரி பதினான்கு நாழிகையில் மகேஷ்வர மூர்த்தமாக அடியும் முடியும் காட்டாமல் அவ்விருவருக்கும் காட்சி அளித்து, விசாரிக்கும் போது, பிரம்ம தேவன் சிவனாரின் திருமுடியைக் கண்டதாகப் பொய்யும், திருமாலானவர் திருஅடியைக் காணவில்லை என்று மெய்யும் விளம்பின படியால், நான்முகனுக்கு கோவிலே இல்லாமல் போவது என்ற சாபமும், திருமாலுக்கு காத்தற்சிறப்புரிமை உண்டாகக் கடவது என்று வாழ்த்தும் அருளின தன்றி, அக்காட்சி ஒருமூன்றேமுக்கால் நாழிகை அளவு விளங்கி மற்ற தேவர்கள் எல்லோரும் கண்டுள்ளமையால், லிங்கோற்பவ காலமே முகூர்த்தம் என்றும், இராத்திரியில் பரமசிவன் மகேஷ்வர மூர்த்தமாகத் தோன்றினபடியால் சிவராத்திரி என்றும் பெயர் பெற்றது. வேடனானவன் இதே நாளில் வில்வத்தால் சிவபெருமானை அர்ச்சித்ததால் சிவதரிசனம் பெற்றான் என்பதே உண்மையாகும்.

✡ஆனால்,இதற்குப் பின்னால் விஞ்ஞான ரீதியான காரணம் உள்ளது என்பது பலருக்குத் தெரியாது.பொதுவாக ஒவ்வொரு அமாவாசை,பௌர்ணமி அதற்கு முன் பின் தினங்களில் பூமியில் சந்திரனுடைய காந்த சக்தியில் மாற்றம் ஏற்பட்டு சகல விதமான ஜீவராசிகளும் மனநிலைத் தடுமாற்றத்திற்கு ஆளாகி, அந்த நேரத்தில் உதிக்கும் எண்ணங்களினால் செயல்படும் செயல்களின் விளைவாகத்துன்பங்களை அனுபவிக்கின்றனர். இது அவர்களை அறியாமலேயே ஒவ்வொரு மாதமும் நடந்து கொண்டிருக்கிறது.காரணம் என்னவென்றால் சந்திரன் மனோகாரகன். மனதையும் அதன் எண்ணங்களையும் ஆள்பவன்.

✡மனநோயாளிகள் #அமாவாசையை ஒட்டிய நாட்களில் அதிகத் துன்பத்திற்கு ஆளாவதும் இதனால்தான். மேற்படி நாட்களில் வியாதியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதுஅனுபவத்தில் நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சாதாரணமானவர்களுக்கு மேற்படி நாட்களில் ஞாபகமறதி, அலர்ஜி, டென்சன்(மன அழுத்தம்), ஜீரண சக்திக் குறைபாடு போன்றவைகளால், சோர்வு, தூக்கமின்மை, அதிக உஷணம் போன்ற துன்பங்கள் ஏற்படும். இன்றைய நடைமுறை வாழ்க்கைச் சூழலில் இதை உணராமல் நாம் வாழந்து பழகிக்கொண்டோம். நம் முன்னோர்கள் இதைப்புரிந்து கொண்டதால், அமாவாசை மற்றும் பௌர்ணமியை ஒட்டிய நாட்களில் மனவலிமையையும், அறிவின் விழிப்பாற்றலைத்தூண்டவும் மன ஒருமை மற்றும் உடல் இயக்கங்களில் நிதானத்தைக் கொண்டுவரவும் விரதம் மற்றும், பூஜைகள், தியானம் போன்றவற்றைக் கடை பிடித்தார்கள்.

✡மாதாந்த வளர்பிறை, தேய்பிறை இரண்டிலும் வருகின்ற ஏகாதசி திதிகளில் குறைவான உணவுப்பழக்கத்தை கை கொள்வார்கள். துவாதசி திதிகளில் கிழங்கு உணவு வகைகளைத் தவிர்த்து, உப்பைக் குறைத்து, கீரைவகைகளை அதிகமாகச் சேர்ப்பார்கள். திரியோதிசி நாட்களில் உணவில் எண்ணெயை நீக்கி, இனிப்பை சொஞ்சம் சேர்த்து மதியம்1.30 மணிக்குள் உண்பார்கள். சதுர்தசி திதிகளில்(மாத சிவராத்திரி) மதிய உணவு அரை வயிறும் இரவு பால் பழம் உணவாகக் கொள்வார்கள். சிலர் சிவ சிந்தனையில் இருந்து பூஜை, அபிஷேக ஆராதனைகளைச்செய்வார்கள், யோக சாதகர்கள் தியானம் மேற்கொள்வார்கள்.

✡மாத சிவராத்திரியில் நடுச்சாமம் (இரவு 12.00 மணி) வரை விழித்திருந்து ஈசனை நினைத்து பூஜைகளோ, தியானமோ மேற்கொள்வார்கள். அதற்குப்பிறகு ஓய்வு எடுப்பார்கள். இவ்வாறாக சிவராத்திரி பூஜையினை மாமாங்க வழிமுறையாக செய்து வந்து 12 வது மாதம் வருகிற மஹாசிவராத்திரி (சூரியன் சந்திரனின் வீட்டுக்கு எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கும் காலம்) அன்று இரவு முழுவதும் கண்விழித்து ஈசனை மனதில் நிறுத்தி சிவ பூஜையினைச் செய்து மாமாங்க பூஜையினை நிறைவு செய்வார்கள். அதாவது சரியை வழியில் உள்ளவர்கள் பூஜைகள் விரதங்கள். கிரியை வழியில் உள்ளவர்கள் இரவில் தூங்கி விடும் அறிவை தூங்காமல் விழிப்பு நிலையில் இருக்கச்செய்வது(தியானம்). இதைக்கடைபிடிப்பதால்உடல்நலமும், மனவளமும் காக்கப்படும்.

✡சைவசமய ஆகமங்களில் சிவராத்திரி ஆகம வழிமுறைகள், கால வரையறை, பூஜைமுறை என்று விரிவான விளக்கங்கள்
கூறப்பட்டுள்ளன. பக்தியும், பூஜைகளும், விரதங்களும், தியான யோகங்களும் எல்லாமே ஈசனை அடைவதற்குத்தான். அதற்கு உடல்நலமும், மனவளமும் அவசியம் என்பதைக்கருத்தில் கொண்டே இத்தகைய நுட்பமான விரத முறைகள் நம் முன்னோர்களால் தரப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் இந்தப் பிரபஞ்ச சக்தியின் இயக்கத்தை ஒட்டியே வடிவமைத்துத் தந்திருக்கிறார்கள் என்பதையோசித்துப் பார்க்கும் போது அவர்களின் விஞ்ஞான அறிவு குறித்து ஆச்சரியம் தோன்றுகிறது. மேலும் மெய்ஞானத்தின் ஒருசிறு பகுதியே விஞ்ஞானம் என்பதுவும் புலனாகிறது. அதற்காக நம்மைத் தயார்படுத்திக்கொள்ளும் நாளே சிவராத்திரி. இந்த விரதத்தை
பொருள்உணர்ந்து அனுஷ்டித்தால் சிவனருளால் அனைத்து வரங்களும் கிடைக்கும்.

🚩மகா சிவராத்திரியில் இதை எல்லாம் செய்யாதீர்கள்🚩

✡மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம்.

✡சிவராத்திரி அன்று சிவனை தரிசித்துக் கொண்டிருக்கும் போது கோவில் ஒரு புரம் உணவு வழங்கப்பட்டு கொண்டு இருந்தது, மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்தப்படுத்தி கொண்டு இருந்தார்கள்.

✡மகா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது…

✡அடியார்கள், சிவாச்சாரியார்கள், கோவிலில் உள்ள குருக்கள் ஏன் இதை கவனித்து தானம் செய்பவர்களிடம் சொல்ல தவறுகிறார்கள் என்று புரியவில்லை,

✡உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டதன் காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

✡மனிதர்களுக்கு மிக முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம். இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும்.

✡உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெறமுடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும். வைகுண்ட ஏகாதசியும் இந்த நோக்கம் தான்.

✡கோவில் என்ன சிற்றுண்டி கடையா? இப்படி பிரசாதம் என்று அவர்கள் பசியை வெல்ல உதவாமல் தரிசிக்க வரும் பக்தர்களை பசியாற்றி மஹா சிவராத்திரி நோக்கத்தை கெடுத்து சாபத்தை பெறுகிறார்கள் என்ற காரணத்தை யார் சொல்வது. பெரியோர்கள் யாரும் இதை கண்டு கொள்வது இல்லை.

✡மகா சிவராத்திரி அன்று #அம்பாளே உணவு அருந்தாமல் இருக்கும் பொழுது நமக்கு ஏன் உணவு?

✡மேலும் சிவபெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர், ஏகாந்தம்; ஏகாந்தம்; ஏகாந்தம். முற்றிலும் அமைதி இவர் விரும்புவது அமைதி

✡மஹா சிவராத்திரி அன்று சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம்.

✡சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாட்களில் நூறுகோடி முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

✡ஆனால் பக்தர்களின் ஆரவாரம், கேளிக்கைகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் சப்தம் கோவிலை பிளக்கிறது. சிவராத்திரி ஒரு வியாபார விழாவாக மாறிக்கொண்டு இருக்கிறது.

✡ஆன்ம தரிசனம் தேடும் சிவ பித்தர்களுக்கு,

✡மாலை 6 மணிக்குள் குளித்து விட்டு, உணவு முடித்து விட்டு கோவிலுக்கு செல்லுங்கள், பணியில் உள்ளவர்கள் பணி முடித்து விட்டு குளித்து விட்டு கோவிலுக்கு சென்று அமைதியாக ஒரு இடத்தில அமர்ந்து சிவ சிந்தனைகள் செய்தாலே போதுமானது.

✡மனதில் சொல்லவேண்டிய மந்திரம்

‘சிவாய நம ஓம்
சிவாய சிவ ஓம்
சிவாய வசி ஓம்
சிவ சிவ சிவ ஓம்’

இப்படி செய்வது ஒரு விதம்,

🚩மற்றது 9 லிங்க தரிசனம் ஒரே இரவில் தரிசிப்பது இன்னொரு விதம்🚩

✡சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவருடைய உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.

✡தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது, முடிந்தால் இவைகளை கோவிலுக்கு #உபயமாக தரலாம்.

✡இப்படி சரியாக எதுவும் செய்யாமல் இரவு முழுவதும் தொலைகாட்சி பார்த்து கண்விழிப்பது, நண்பர்களுடன் பொழுது போக்கிற்காக கோவிலை சுற்றி வருவது, கோவிலில் உணவு கொடுத்து புண்ணியம் சேர்கிறேன் என்று செய்வது பலன் இல்லை.

✡சிவராத்திரி என்ற பெயர் வர காரணம் அம்பாள் தான். பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.

✡நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது “#சிவராத்திரி” என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

✡சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை(சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்.

✡சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே “சிவராத்திரி” என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

✡பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

✡நம்மால் முடிந்தவரை முறையான சிவவழிபாடு செய்து கர்ம வினைகளை போக்கிடுவோம்!

சிவாய நம 🙏
திருச்சிற்றம்பலம்
சர்வம் சிவமயமே
ஆலவாயர் அருட்பணி மன்ற தந்தையே வணக்கங்கள் 🌺🙏🌺

____________________________

🔱ശിവാലയഓട്ടം 🔱

ശിവരാത്രിയോടനുബന്ധിച്ച് തിരുവനന്തപുരം-കന്യാകുമാരി ഭാഗങ്ങളില്‍ ഇന്നും നിലനില്‍ക്കുന്ന ആചാരമാണ് ശിവാലയ ഓട്ടം. ‘ചാലയം ഓട്ടം’ എന്നും ഇത് അറിയപ്പെടുന്നുണ്ട് കുംഭമാസത്തിൽ ശിവരാത്രിദിവസം തമിഴ്നാട്ടിലെ കന്യാകുമാരി ജില്ലയിൽ വിളവൻകോട്, കൽക്കുളം താലൂക്കുകളിലായുള്ള 12 ശിവക്ഷേത്രങ്ങളിൽ ഒരു രാത്രിയും ഒരു പകലും കൊണ്ട് നടത്തുന്ന ദർശനമാണിത്. (തിരുമല, തിക്കുറുശ്ശി, തൃപ്പരപ്പ്, തിരുനന്ദിക്കര, പൊന്മന, പന്നിപ്പാകം, കൽക്കുളം, മേലാങ്കോട്, തിരുവിടയ്ക്കോട്, തിരുവിതാംകോട്, തൃപ്പന്നികോട്, തിരുനട്ടാലം എന്നിവയാണ് 12 ശിവാലയ ക്ഷേത്രങ്ങൾ)

ഈ പന്ത്രണ്ടു ക്ഷേത്രങ്ങളിലും ചെന്നു കുളിച്ചു തൊഴുന്നതു പാപമോചനത്തിനുള്ള ഒരു മാർഗ്ഗമാണെന്നു വിചാരിക്കപ്പെട്ടുവരുന്നു. ഇതിലേക്കായി ഒന്നുമുതൽ പന്ത്രണ്ടുവരെയുള്ള ക്ഷേത്രങ്ങളിൽ എല്ലാം ഒരുദിവസംകൊണ്ടു കുളിച്ചുതൊഴുന്നതിനായി യത്നിക്കുന്നവരെ “ചാലയം ഓട്ടക്കാർ” എന്നു വിളിക്കുന്നു. ചാലയം എന്നതു ശിവാലയം എന്നതിന്റെ തത്ഭവമാണെന്നു വിചാരിക്കാം.

ശിവരാത്രി നാളിൽ ദ്വാദശ രുദ്രന്മാരെ വണങ്ങുക എന്നതാണ് ഈ ആചാരത്തിന്റെ സവിശേഷത.
മഹാഭാരത കഥയുമായി ബന്ധപ്പെട്ടാണ് ശിവാലയഓട്ടത്തിനുപിന്നിലുള്ള ഐതിഹ്യം നിലനിൽക്കുന്നത്. ധർമ്മപുത്രൻ നടത്തിയ യാഗത്തിൽ പങ്കെടുക്കുവാൻ ശ്രീകൃഷ്ണന്റെ നിർദ്ദേശപ്രകാരം വ്യാഘ്രപാദമുനിയെ കൂട്ടിക്കൊണ്ടുവരുവാൻ ഭീമസേനൻ പോയി. കടുത്ത ശിവഭക്തനായ വ്യാഘ്രപാദൻ തന്റെ തപസ്സിളക്കിയ ഭീമനെ ആട്ടിപ്പായിച്ചു. ശ്രീകൃഷ്ണൻ നൽകിയ 12 രുദ്രാക്ഷങ്ങളുമായി ഭീമൻ വീണ്ടും തിരുമലയിൽ തപസ്സനുഷ്ഠിക്കുകയായിരുന്ന വ്യാഘ്രപാദനു സമീപമെത്തി. മുനി കോപിതനായി ഭീമനുനേരെ തിരിയുകയും ഭീമൻ പിന്തിരിഞ്ഞ് ഗോവിന്ദാ… ഗോപാലാ……. എന്നു വിളിച്ച് ഓടൻ തുടങ്ങുകയും ചെയ്തു. മുനി ഭീമന്റെ സമീപമെത്തുമ്പോൾ ഭീമൻ അവിടെ ഒരു രുദ്രാക്ഷം നിക്ഷേപിക്കും. അപ്പോൾ അവിടെ ഒരു ശിവലിംഗം ഉയർന്നുവരികയും ചെയ്യും. മുനി അവിടെ പൂജ നടത്തുമ്പോൾ ഭീമൻ മുനിയെ വീണ്ടും യാഗത്തിനു പോകാൻ പ്രേരിപ്പിക്കാൻ ശ്രമിക്കും. മുനി വീണ്ടും ഭീമന്റെ പുറകേ പോകുമ്പോൾ ഭീമൻ വീണ്ടും വീണ്ടും രുദ്രാക്ഷങ്ങൾ നിക്ഷേപിക്കുകയും ചെയ്യും. അങ്ങനെ 11 രുദ്രാക്ഷങ്ങളും നിക്ഷേപിക്കുകയും ശിവലിംഗങ്ങൾ ഉയർന്നു വരികയും ചെയ്തു. ഒടുവിൽ 12-ആമത്തെ രുദ്രാക്ഷം നിക്ഷേപിച്ച സ്ഥലത്ത് ശ്രീകൃഷ്ണൻ പ്രത്യക്ഷപ്പെട്ട് വ്യാഘ്രപാദന് ശിവനായും ഭീമന് വിഷ്ണുവായും ദർശനം നൽകുകയും ചെയ്തു. അങ്ങനെ ഇരുവർക്കും ശിവനും വിഷ്ണുവും ഒന്നെന്ന് വ്യക്തമായി. അദ്ദേഹം പിന്നീട് ധർമ്മപുത്രന്റെ യാഗത്തിൽ പങ്കുകൊണ്ടു. ഭീമൻ രുദ്രാക്ഷം നിക്ഷേപിച്ചതിന്റെ ഫലമായി സ്ഥാപിതമായ 12 ശിവക്ഷേത്രങ്ങളിലാണ് ശിവാലയ ഓട്ടം നടക്കുന്നത്.

ശിവാലയ ഓട്ടത്തിന് തയ്യാറെടുക്കുന്ന ഭക്തന്‍ന്മാരെ “ഗോവിന്ദന്‍മാര്‍’ എന്ന് പറയുന്നു. കുംഭമാസത്തിലെ ഏകാദശിക്ക് ഒരാഴ്ച മുന്‍പ് മാലയിട്ട് വ്രതമാരംഭിക്കണം ഈ ദിവസങ്ങളില്‍ സ്വന്തം ഗൃഹത്തില്‍ നിന്ന് ഭക്ഷണം കഴിക്കാറില്ല.
ക്ഷേത്രത്തിലെ നിവേദ്യച്ചോറ് മാത്രമേ കഴിക്കുകയുളളൂ. രാത്രി കരിക്കും പഴവും മാത്രം. ത്രയോദശി നാളില്‍ ഉച്ച്ക്ക് ആഹാരം കഴിഞ്ഞ് കുളിച്ച് ഈറനോടെ ഒന്നാം ശിവാലയമായ തിരുമലയില്‍ സന്ധ്യാദീപം ദര്‍ശിച്ച് ഓട്ടമാരംഭിക്കുന്നു. വെള്ളമുണ്ടോ കാവി മുണ്ടോ ആണ് വേഷം. കൈകളില്‍ വിശറിയുണ്ടാകും ചെല്ലുന്ന ക്ഷേത്രങ്ങളിലെ വിഗ്രഹങ്ങളെ വീശാനാണ് വിശറി.വിശറിയുടെ അറ്റത്ത് രണ്ട് തുണി സഞ്ചികളുണ്ടാകും ഒന്നില്‍ പ്രസാദ ഭസ്മവും മറ്റേതില്‍ വഴിയാത്രയ്ക്കാവശ്യമായ പണവും സൂക്ഷിക്കുന്നു.

ഇങ്ങിനെ സംഘമായി ഓടി പന്ത്രണ്ട് ക്ഷേത്രത്തിലും എത്തുന്നു.ഓരോ ക്ഷേത്രത്തിലും എത്തുന്പോള്‍ കുളിച്ച് ഈറനോടെ വേണം ദര്‍ശനം നടത്തുവാന്‍ വഴിയില്‍ പാനകം, ചുക്കുവെളളം, ആഹാരം എന്നിവ കൊടുക്കും. ഒടുവിലത്തെ ശിവക്ഷേത്രമായ തിരുനട്ടാലെത്തി ഓട്ടം സമാപിക്കുന്നു. “ഗോവിന്ദാ ഗോപാല’ എന്ന് വഴിനീളെ ഉച്ചരിച്ചാണ് ഓടുന്നത ്.

  1. തിരുമല ശിവക്ഷേത്രം

ശിവാല ഓട്ടത്തിലെ ഒന്നാമത്തെ ക്ഷേത്രമായ ഇവിടെ ശൂലപാണി ഭാവത്തിലാണ് ശിവനെ പ്രതിഷ്ഠിച്ചിരിക്കുന്നത്. പതിനൊന്നാം നൂറ്റാണ്ടോളം പഴക്കം വരുന്ന ശിലാലിഖിതങ്ങള്‍ ഈ ക്ഷേത്രത്തില്‍ നിന്നും കണ്ടെടുത്തിട്ടുണ്ട്. രാജേന്ദ്രചോളന് ഒന്നാമന്റെ കാലത്തെക്കുറിച്ചുള്ള പരാമര്‍ശവും ഇവിടെ നിന്നും ലഭിച്ചിട്ടുണ്ട്. മുഞ്ചിറൈ തിരുമലൈ തേവര്‍ എന്നാണ് ഈ ക്ഷേത്രം പണ്ട് അറിയപ്പെട്ടിരുന്നത്. തിരുവനന്തപുരം-കന്യാകുമാരി ദേശീയപാതയില്‍ കുഴിത്തുറയ്ക്കു സമീപമുള്ള വെട്ടുവെന്നിയില്‍ നിന്നും തേങ്ങാപ്പട്ടണത്തേക്കുള്ള വഴിയിലാണ് ഈ ക്ഷേത്രം.

  1. തിക്കുറിച്ചി ശിവക്ഷേത്രം

താമ്രപര്‍ണി നദീതീരത്താണ് തിക്കുറിച്ചി ശിവക്ഷേത്രം സ്ഥിതിചെയ്യുന്നത്. നന്ദി വാഹനമില്ലാത്ത മഹാദേവ പ്രതിഷ്ഠയാണ് ഇവിടെ. തിരുമലയില്‍ നിന്നു മാര്‍ത്താണ്ഡം പാലത്തിലൂടെ ഞാറാം വിളയിലെത്തി ചിതറാളിലേക്കുള്ള വഴിയിലൂടെ ഈ ക്ഷേത്രത്തിലെത്താം.

  1. തൃപ്പരപ്പ് ശിവക്ഷേത്രം

കുഴിത്തുറയില്‍ നിന്നു 15 കിലോമീറ്റര്‍ അകലെയാണ് തൃപ്പരപ്പ്. കോതയാറിന്റെ തീരത്താണ് ഈ പുരാതന ക്ഷേത്രം. ശങ്കരാചാര്യര്‍ ഈ ക്ഷേത്രത്തിലെത്തിയിട്ടുണ്ടെന്നാണ് വിശ്വാസം. ദക്ഷനെ വധിച്ച വീരഭദ്രരൂപത്തിലാണ് ഇവിടുത്തെ ശിവ പ്രതിഷ്ഠ. ക്ഷേത്രത്തിനു ഒന്പതാം നൂറ്റാണ്ടോളം പഴക്കം കണക്കാക്കുന്നു. ആയ് രാജാവായ കരുനന്തടക്കന്റെ കാലത്ത് തയ്യാറാക്കിയ രണ്ടു ചെമ്പോലകള്‍ ഇവിടെനിന്നും കണ്ടെടുത്തിട്ടുണ്ട്. തിക്കുറിച്ചിയില്‍ നിന്നും കളിയല്‍ വഴിയും കുലശേഖരം വഴിയും ക്ഷേത്രത്തിലെത്താം.

  1. തിരുനന്തിക്കര ശിവക്ഷേത്രം

നന്തി ആറിന്റെ കരയിലാണ് ക്ഷേത്രം സ്ഥിതി ചെയ്യുന്നത്. കേരളീയ ക്ഷേത്ര ശില്പകലാ രീതിയിലാണ് ക്ഷ്ത്രത്തിന്റെ നിര്‍മ്മാണം. നന്ദികേശ്വര രൂപത്തിലാണ് ശിവ പ്രതിഷ്ഠ. തൃപ്പരപ്പില്‍ നിന്നു കുലശേഖരം വഴി 8 കിലോമീറ്റര്‍ സഞ്ചരിച്ചാല്‍ തിരുനന്തിക്കരയിലെത്താം.

  1. പൊന്മന ശിവക്ഷേത്രം

പാണ്ഡ്യരാജവംശവുമായി ഈ ക്ഷേത്രത്തിനു ബന്ധമുണ്ട്. പൊന്മനയിലെ ശിവന്‍ തീമ്പിലാധിപന്‍ എന്നാണറിയപ്പെടുന്നത്. തീമ്പന്‍ എന്ന ശിവഭക്തന് ദര്‍ശനം നല്കിയതുമായി ബന്ധപ്പെട്ടാണ് ഈ പേരുണ്ടായത്. പൊന്മനയ്ക്കടുത്തുള്ള മംഗലം എന്ന സ്ഥലം പഴയ നാഞ്ചിനാടിന്റെ അതിര്‍ത്തിയായി കണക്കാക്കുന്നു. തിരുനന്തിക്കരയില്‍ നിന്നു കുലശേഖരം പെരുഞ്ചാണി റോഡില്‍ 8 കിലോമീറ്റര്‍ സഞ്ചരിച്ചാല്‍ പൊന്മനയിലെത്താം.

  1. പന്നിപ്പാകം ശിവക്ഷേത്രം

നെല്‍വയലുകള്‍ക്ക് മധ്യത്തിലാണ് പന്നിപ്പാകം ക്ഷേത്രം. അര്‍ജ്ജുനന്‍ ശിവനില്‍ നിന്നും പാശുപതാസ്ത്രം നേടിയ കഥയുമായി ഈ ക്ഷേത്ര ഐതിഹ്യം ബന്ധപ്പെട്ടു കിടക്കുന്നു. ഇതിനു സമീപത്തായി കാട്ടാളന്‍ കോവില്‍ എന്നൊരു ക്ഷേത്രവുമുണ്ട്. പൊന്മന നിന്നു വലിയാറ്റുമുഖം വഴി പന്നിപ്പാകം ക്ഷേത്രത്തിലെത്താം.

കല്‍ക്കുളം ശിവക്ഷേത്രം

7. കൽക്കുളം ശിവക്ഷേത്രം

ശ്രീ വര്‍ത്തമാനപുരം എന്നതായിരുന്നു ഈ സ്ഥലത്തിന്റെ പഴയ പേര്. പിന്നീട് കല്ക്കുളം എന്ന പേരില്‍ ഇവിടം അറിയപ്പെട്ടു. ക്രിസ്തുവര്‍ഷം 1744 ല്‍ മാര്‍ത്താണ്ഡവര്‍മ്മ തിരുവിതാംകൂറിന്റെ തലസ്ഥാനമായി കല്ക്കുളം തെരഞ്ഞെടുക്കുകയും പത്മനാഭപുരം എന്ന് പേരിടുകയും ചെയ്തു. പാര്‍വതീ സമേതനായ ശിവപ്രതിഷ്ഠയാണിവിടെ. ശിവാലയ ഓട്ടം നടക്കുന്ന ശിവക്ഷേത്രങ്ങളില്‍ പാര്‍വതി പ്രതിഷ്ഠയുള്ളതും രഥോത്സവം നടക്കുന്നതുമായ ഏക ക്ഷേത്രമാണിത്. പാര്‍വതി പ്രതിഷ്ഠ ആനന്ദവല്ലി അമ്മന്‍ എന്നാണറിയപ്പെടുന്നത്. പന്നിപ്പാകത്തു നിന്നും 6 കിലോമീറ്റര്‍ സഞ്ചരിച്ചാല്‍ കല്‍ക്കുളത്തെത്താം.

  1. മേലാങ്കോട് ശിവക്ഷേത്രം

കാലകാല രൂപത്തിലാണ് ഇവിടുത്തെ ശിവ പ്രതിഷ്ഠ. എട്ട് ക്ഷേത്രങ്ങളുടെ സമുച്ചയമാണ് മേലാങ്കോട്. പത്മനാഭപുരത്തു നിന്നും 2 കിലോമീറ്റല്‍ സഞ്ചരിച്ചാല്‍ മേലാങ്കോട് ക്ഷേത്രത്തിലെത്താം.

  1. തിരുവിടൈക്കോട് ശിവക്ഷേത്രം

‘വിടൈ’ എന്നാല്‍ ‘കാള’ എന്നാണ് അര്‍ത്ഥം. ഈ ക്ഷേത്രത്തിലെ നന്ദി വിഗ്രഹത്തിനു ജീവന്‍ വച്ചതിനെ തുടര്‍ന്നാണ് തിരുവിടൈക്കോട് എന്ന പേരു വരാന്‍ കാരണമെന്ന് വിശ്വാസമുണ്ട്. 18 സിദ്ധന്മാരില്‍ ഒരാളായ എടൈക്കാടര്‍ സ്വര്‍ഗ്ഗം പൂകിയത് ഈ ക്ഷേത്രത്തില്‍ നിന്നായിരുന്നുവെന്നും അങ്ങനെയാണു ഈ ക്ഷേത്രത്തിനു തിരുവിടൈക്കോട് എന്ന പേരു വരാന്‍ കാരണമെന്നും മറ്റൊരു വിശ്വാസം. ചടയപ്പന്‍ അഥവാ ജടയപ്പന്‍ ആണു തിരുവിടൈക്കോട്ടെ പ്രതിഷ്ഠ. മേലാങ്കോട്ടു നിന്നും 5 കിലോമീറ്റര്‍ സഞ്ചരിച്ചാല്‍ തിരുവിടൈക്കോട് ക്ഷേത്രത്തിലെത്താം.

  1. തിരുവിതാംകോട് ശിവക്ഷേത്രം

പത്താമത്തെ ക്ഷേത്രമാണു തിരുവിതാംകോട് ശിവക്ഷേത്രം. ആയ്, വേല് രാജവംശങ്ങളുമായി ബന്ധമുള്ള പ്രാചീന ക്ഷേത്രമാണു തിരുവിതാംകോട്. മൂന്നു ഏക്കറോളം വരുന്നതാണു ക്ഷേത്രസ്ഥലം. തക്കല കേരളപുരം വഴി തിരുവിതാംകോട് ക്ഷേത്രത്തിലെത്താം.

  1. തൃപ്പന്നിക്കോട് ശിവക്ഷേത്രം

മഹാവിഷ്ണുവിന്റെ വരാഹാവതാരവുമായി ബന്ധപ്പെട്ടതാണു ഈ ക്ഷേത്രത്തിന്റെ ഐതിഹ്യം. വരാഹത്തിന്റെ തേറ്റ (കൊമ്പ്) മുറിച്ച രൂപത്തിലാണു ഇവിടുത്തെ പ്രതിഷ്ഠ. കേരള ക്ഷേത്ര ശില്പ മാതൃകയിലുള്ള ദ്വിതല ശ്രീകോവിലാണു ഇവിടെ. കുഴിക്കോട് പള്ളിയാടി വഴി എട്ട് കിലോമീറ്റര്‍ സഞ്ചരിച്ചാല്‍ ക്ഷേത്രത്തിലെത്താം.

  1. തിരുനട്ടാലം ശിവക്ഷേത്രം

ശിവാലയ ഓട്ടത്തിലെ അവസാന ക്ഷേത്രമാണു തിരുനട്ടാലം ശിവക്ഷേത്രം. ശങ്കരനാരായണ പ്രതിഷ്ഠയുള്ള ക്ഷേത്രവും ഇതാണ്. ശിവ പ്രതിഷ്ഠയും ശങ്കരനാരായണ പ്രതിഷ്ഠയുമുള്ള രണ്ട് ക്ഷേത്രങ്ങള്‍ ഇവിടെയുണ്ട്. രണ്ടു ക്ഷേത്രങ്ങള്‍ക്കിടയിലായി ഒരു കുളവും കാണാം.

തയ്യാറാക്കിയത്‌ : Sri. Mahesh Sadasivan | 7.3.2021