
கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் நிருவாகத்தின் இந்த திருக்கோவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய மற்றும் கொடைகள் சட்டம் 22/1959 மற்றும் அதன் திருத்த சட்டம் 50/1974 பிரிவுகளில் உள்ள இணைப்பு பட்டியலில் 234வது கோவிலாக அத்திசேரி பெற்றி தேவசம் உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் பட்டியலில் 233வது ஆகவும் உள்ளது இத்திருக்கோவிலுக்கு இப்போதைய பெயர் – Koovakuzhi Sree Dharma Sastha Kovil.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 490 திருக்கோயில்களும் திருக்கோயிலுக்கு சொந்தமான ஏராளமான சொத்துக்களும் உள்ளன. தற்போது இவையெல்லாம் தனியார் வசம்!!!திருவட்டார் ஸ்ரீ ஆதி கேசவ பெருமாளுக்கு சொந்தமான பெற்றி தேவசம் அத்திசேரி காவு கோயில் பூஜைகள்யின்றி ஆக்கிரமிப்பில்!!! (பழைய புல எண். ஆற்றூர் வருவாய் கிராமம் 3910).
2016 ஆம் ஆண்டு ஆணையர் வீரஷண்முகமணி அவர்கள் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியில் (W.P(MD No.2142-2016) கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் 490 திருக்கோயிலும் தினசரி பூஜைகள் நடக்கிறது என்றும், திருக்கோயிலின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பாதுகாப்பாக உள்ளது. திருக்கோயில் சொத்துகள் அனைத்தும் எந்தவிதமான ஆக்கிரமிப்புயின்றி இணை ஆணையர் கண்காணிப்பில் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் ஆத்திசேரி காவு கோயில் பூஜைகள் இல்லாமல் இருப்பதையும், சாஸ்தா காவு கோயில் தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பதை அரசுக்கு தெரிவித்து கொள்கிறது.

You must be logged in to post a comment.