173rd KDB (172)- Mandaikadu Devaswom- Arulmigu Mandaikkadu Bhagavathy Thirukkovil, Mandaikkadu, Kalkulam Taluik. (Major Devaswom)

Screenshot_20230221-235636_Drive

48261f2026cfdb5cf6492b3e3776eb3d

Mandaikadu-Bhagavathy-Devi-Temple-Mandaikadu-Nagercoil-TamilnaduScreenshot_20230221-203021_ChromeScreenshot_20230221-202809_Microsoft 365 (Office)Screenshot_20230221-202819_Microsoft 365 (Office)Screenshot_20230221-202849_Microsoft 365 (Office)ailar2k3zwscitu8b38hj4zx6s9i_1580530482_shutterstock_1592606077

அருள்மிகு மண்டைக்காடு பகவதி அம்மன்

அம்மன் : பகவதி அம்மன்
பெருமை : பெண்களின் சபரிமலை
சிறப்பு : உயரமான புற்று
விசேசம் : மண்டையப்பம்
தல மரம் : வேம்பு மரம்.
வழிபாடு : வெடிவழிபாடு
பிரசாதம் : புட்டமுது
ஊர் : மண்டைக்காடு
புராணபெயர் : மந்தைக்காடு
மாவட்டம் : கன்னியா குமரி

பிரார்த்தனை

கல்யாண வரம், குழந்தை வரம்,உடல் உறுப்புகள் குறைபாடு,திருஷ்டி , தோசம் , தலைவலி நீங்குதல் முதலிய பிரார்த்தனைகள்

நேர்த்தி கடன்

கல்யாண காரியங்களுக்கு பட்டு தாலி காணிக்கை செலுத்தலாம்

உடல் நலம் குணமாக வெள்ளியில் கை,கால் வடிவம் செய்து வைத்து வழிபட்டால் நோய் குணமாகிறது. மண் சோறு சாப்பிடலும் நடக்கிறது

குழந்தை வரத்திற்கு தொட்டில் கட்டி விடலாம்.

திருஷ்டி தோசம் கழிய வெடி வழிபாடு செய்யப்படுகிறது.

கோயிலின் சிறப்பம்சம்

கோயில் அமைப்பு : ஆரஞ்சு கலரில் முகப்பு . ஓடு வேய்ந்த மேற் கூரையுடன் மலையாளச் சாயல் படிந்த எளிமையுடன் இருக்கும் கோயில்.அதற்குள் மிகப் பிரம்மாண்டமாக உருவெடுத்து நிற்கும் புற்று.அதன் தலைப் பகுதியில் பகவதி அம்மன்.

மண்டையப்பம்: பச்சரிசி மாவு சர்க்கரை வெல்லம் கொண்டு மண்டையப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்தால் தலைவலி நோய் குணமாகும் அதிசயம் நடக்கிறது.

தல பெருமைகள் :

*பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மிகப் பிரலமான கோயில்.

*15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக்கொண்டிருக்கும் புற்று தான் பகவதி அம்மன் என்பது சிறப்பு

*இருமுடி கட்டி பெண்கள் பரவசமாக வந்து அம்மனை தரிசிக்கிறார்கள்

*தரையிலிருக்கும் ஸ்ரீ சக்சரம் மேல் புற்று வளர்ந்து கொண்ேட வந்தது

*கோயில் 3 தடவைக்கு மேல் இடித்து கட்டப்பட்டுள்ளது.

*காலை மட்டுமே அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப் படுகிறது.

முக்கிய திருவிழாக்கள்

மாசிப் பெருந்திருவிழா 10 நாள் திருவிழா10 லட்சம் பக்தர்கள் கூடுவர்.

மாதாமாதம் பௌர்ணமி நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.

ஒவ்வொரு தமிழ் மாத கடைசி செவ்வாய் வெள்ளி கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கூடுவர்.
தல வரலாறு

சங்கராச்சாரியார் கேரள சீடர்களோடு வந்து ஸ்ரீ சக்கரம் வைத்து பூஜை செய்கின்றரார். தினமும் தான் தங்கியிருந்த குடிலில் இருந்து ஸ்ரீ சக்கரம் இருந்த இடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் ஸ்ரீ சக்கரம் திரும்ப வரவே இல்லை.எடுத்துப் பார்த்தும் திரும்ப வரவில்லை.இந்த இடத்திலேயே இருந்து சித்து விளையாட்டுக்கள் நடத்தி மண்ணுக்குள் சமாதி ஆகிவிட்டார்.அந்த ஸ்ரீசக்கரம் இருந்த இடத்தின் மேல் புற்று வளர்ந்து வருகிறது.அந்த இடத்தில் சிறுவர்கள் விளையாடும்போது தடுக்கி ரத்தம் வருகிறது.இந்த விசயம் அப்பகுதியில் இருக்கும் கேரள மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கு தெரிவிக்கப் பட்டது. அவரும் அந்த இடத்தில் சிறு குடில் கட்டி வழிபாடு நடத்தினார். பின்பு காலப்போக்கில் அம்மனின் மகிமை பரவ பரவ பக்தர்கள் பெரும்அளவில் வந்து வழிபடும் பெரிய கோயிலாக புகழடைந்ததாக கூறப்படுகிறது.

மாதாமாதம் பௌர்ணமி நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : நாகர்கோயில் 23 கி.மீ. திருவனந்தபுரம் 75 கி.மீ. திருநெல்வேலி 95 கி.மீ.

தங்கும் வசதி : கோயிலில் விடுதி உள்ளது. கட்டணம் ரூ.25 , ரூ.50.

தவிர குடும்பத்தோடு வரும் பக்தர்கள் நாகர்கோயில் நகரில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.

கட்டணம் ரூ.150 முதல் ரூ.400 வரை.

போக்குவரத்து வசதி : *தென்தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களிலிருந்து நாகர்கோயிலுக்கு நிறையபஸ் வசதி உள்ளது.அங்கிருந்து சாலை மார்க்கமாக மண்டைக்காடு கோயிலுக்கு செல்லலாம்.

*அருகிலுள்ள ரயில் நிலையம் இரணியல், நாகர்கோயில்
*அருகிலுள்ள விமான நிலையம் திருவனந்தபுரம், மதுரை.

Malayalam version:

Screenshot_20230221-225212_Microsoft 365 (Office)Screenshot_20230221-225340_Microsoft 365 (Office)Screenshot_20230221-225347_Microsoft 365 (Office)Screenshot_20230221-225352_Microsoft 365 (Office)Screenshot_20230221-225422_Microsoft 365 (Office)Screenshot_20230221-225429_Microsoft 365 (Office)Screenshot_20230221-225507_Microsoft 365 (Office)Screenshot_20230221-225518_Microsoft 365 (Office)

for daily news:

https://www.facebook.com/Mandaikadu?mibextid=ZbWKwL

Request to All:

[26/02, 04:26] Kāttālai A Rādhākrishnan: In Vaikkam Mahadevar devaswom, there is a *Villuppattu offering* during the festival days by the *Vaanika Chettiyars* Who were migrated from Mandaikkadu to Vikkam.

 This migration happened by the order of Maharaja Karthikai Thirunal of Travancore dynasty for the purpose of making Oil and providing daily lamps for Vaikam (Devaswom) Mahadevar (Thirukkovil) Temple. 

Latter the migrated people from Mandaikadu to Vaikkam were known as *Kollathukar*(Kollam deshakkar).

The above said Villuppattu offering is reviewing All these stories of migration from Mandaikkadu to Vikkam.. 

Now Vaanika Chettiyar very wealthy and Prosperous in Vaikkam… they were following the tradition and the Kaaraayma right.. 

But what about the remaining Vaanika chettiyars in Mandaikkadu region; who had the Kaaraayma right in Mandaikkadu Devaswom? 

I seen many Traditional oil Extracting Chucks were laying down on road sides… !!!? Any one from this group is answerable? Then please 🙏 

It will help me to move further into my Research on Travancore History and Devaswoms… 

Dr.A RADHAKRISHNAN 

26.02.2023

http://www.490kdbtemples.org

[26/02, 04:54] Kāttālai A Rādhākrishnan: *கேரள மானிலம் வைக்கம் மகாதேவர் தேவஸ்வத்தில், மண்டைக்காடு தேசத்திலிருந்து வைக்கம் தேசத்திர்க்கு இடம் பெயர்ந்த வாணிகச் செட்டியார்களால் திருவிழா நாட்களில் பாடப்படும் வில்லுப்பாட்டு வழிவாடு (வழிபாடு)* உண்டு.

 வைக்கம் (தேவஸ்வம்) மகாதேவர் (திருக்கோவில்) கோவிலுக்கு தினசரி விளக்குகள் ஏற்றும் பொருட்டு எண்ணெய் தயாரிப்பதற்காகவும், வழங்குவதற்காகவும் திருவிதாங்கூர் சமஸ்தானம் ஆண்ட கார்த்திகைத் திருநாள் மகாராஜாவின் உத்தரவின் பேரில் இந்த இடம்பெயர்வு நடந்தது.

பிற்காலத்தில் மண்டைக்காடு தேசத்தில் இருந்து வைக்கம் தேசத்திர்க்கு இடம்பெயர்ந்த மக்கள் *கொல்லத்துகர்* (கொல்லம் தேசக்காரர்) என்று அழைக்கப்பட்டனர்.

மேலே கூறப்பட்ட வில்லுப்பாட்டு வழிவாடில்… மண்டைக்காடுவிலிருந்து வைக்கத்திற்கு இடம்பெயர்ந்த இந்த கதைகள் அனைத்தையும் தேளிவாக வர்ணனை செய்யப்பட்டுள்ளது.

இப்போது வைக்கத்தில் வாழும் வாணிகச் செட்டியார்கள் பெரும் செல்வந்தராகவும், செழிப்பாகவும் இருக்கிறார்… அவர்கள் பாரம்பரியத்தையும் காராண்மை அவகாசத்தயும் பாரம்பரிய குல தொழில் பின்பற்றி வருகிறார்கள்.

ஆனால் மண்டைக்காடு பகுதியில் எஞ்சியிருக்கும் வாணிகச் செட்டியார்களின் நிலை என்ன? ; மண்டைக்காடு தேவஸ்வத்தில் காராண்மை அவகாசம் என்னானது ?; யாருக்கு இருக்கிறது?

மண்டைக்காடு பகுதியில் பல பாரம்பரிய எண்ணெய் பிரித்தெடுக்கும் செக்குகள் கிராம் வீதிகளின் ஓரங்களில் கிடப்பதை நான் பார்த்தேன்… !!!? யாராவது பதில் சொல்ல முடியுமா? தயவுசெய்து 🙏

திருவிதாங்கூர் வரலாறு மற்றும் தேவஸ்தானம் பற்றிய எனது ஆராய்ச்சியில் மேலும் முன்னேற இது எனக்கு உதவும்..

 முனைவர். ஏ ராதாகிருஷ்ணன்

26.02.2023

http://www.490kdbtemples.org